February 7, 2017
தண்டோரா குழு
தமிழக முதல்வரின் கூடுதல் முதன்மைச் செயலராக இருந்த சாந்தா ஷீலா நாயர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்ட உயர் அதிகாரிகள் ஒருவர் பின் ஒருவராக ராஜினாமா செய்வது தொடர்கிறது. அந்த வகையில், முதலமைச்சரின் தனிப்பிரிவு சிறப்பு அதிகாரியாக செயல்பட்டு வந்த சாந்தா ஷீலா நாயர் தனது சொந்த காரணங்களுக்காகப் பதவியை ராஜினாமா செய்துவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று மீண்டும் முதலமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்ட ஜெயலலிதா, சாந்தா ஷீலா நாயரைத் தனிப்பிரிவு அதிகாரியாக நியமித்தார்.
மேலும், அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட வாக்குறுதிகளைச் செயல்படுத்தும் பணிகளைக் கவனிக்கும் தனி அதிகாரியாக அவர் நியமிக்கப்பட்டார். அந்தப் பதவியில் இருந்து சாந்தா ஷீலா நாயர் தனது பதவியை ராஜினாமா செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.