• Download mobile app
25 Nov 2024, MondayEdition - 3211
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அதிமுகவினர் ஒரே குடும்பமாக உள்ளனர் – சசிகலா

February 8, 2017 தண்டோரா குழு

“அதிமுகவினர் ஒரே குடும்பமாக உள்ளனர். அ.தி.மு.க. கட்சிக்குள் எந்த பிரச்சினையும் இல்லை” என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா கூறியுள்ளார்.

தமிழக முதலமைச்சர் ஒ. பன்னீர்செல்வத்தின் பேட்டியைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை இரவு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா போயஸ் கார்டன் இல்லத்தில் அ.தி.மு.க. அமைச்சர்கள், மூத்த தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

அதன் பின் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில் “அதிமுகவினர் ஒரே குடும்பமாக உள்ளனர். அ.தி.மு.கவினர்க்குள் எந்த பிரச்சினையும் இல்லை. முதலமைச்சர் ஒ. பன்னீர்செல்வத்தை நாங்கள் மிரட்டவில்லை. அவர் எங்களிடம் நன்றாக தான் பேசிக்கொண்டிருந்தார்.

தற்போது தூண்டுதல் காரணமாகவே அவர் பழிபோடுகிறார். நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ, அதைத்தான் நானும் நினைக்கிறேன் அவர் பின்னணியில் திமுக உள்ளது. காரணம் சட்டப்பேரவை கூட்டத்தில் முதலமைச்சரும் எதிர்க்கட்சி தலைவரும் ஒருவரை ஒருவர் பார்த்து, சிரித்துக் கொண்டனர். அவர் மீது உரிய கட்சி ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார் சசிகலா
அ.தி.மு.க. பொருளாளர் பதிவியிலிருந்து தமிழக முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டதாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா புதன்கிழமை அறிவித்தார்.

அதற்குப் பதிலளிக்கும் வகையில், ”என்னை யாரும் பொருளாளர் பதவியிலிருந்து நீக்க முடியாது” என்று தமிழக முதலமைச்சர் ஒ. பன்னீர்செல்வம் கூறினார்.

மேலும் படிக்க