February 11, 2017
தண்டோரா குழு
உலகின் அதிக எடை கொண்ட பெண்ணாக கருதப்படும் எமான் அமகது சிகிச்சைக்காக இந்தியா வந்துள்ளார்.
எகிப்து நாட்டைச் சேர்ந்த எமான் அகமது உலகின் அதிக எடை கொண்ட பெண்ணாக கருதப்படுகிறார். சுமார் 500 கிலோ எடையுடன் மிகவும் சிரமப்பட்டு வரும் இவருக்கு உலக நாடுகள் சிகிச்சை அளிக்க மறுத்தனர்.
இந்நிலையில், மும்பையில் உள்ள மருத்துவர் முப்பஷால் எமானுக்கு இலவசமாக சிகிச்சை அளிப்பதாக கடந்த டிசம்பர் மாதம் அறிவித்திருந்தார்.
இதையடுத்து, சிகிச்சைக்காக எமான் இன்று மும்பை வந்துள்ளார். இதைத்தொடர்ந்து அவருக்கு விரைவில் எடைக் குறைப்பதற்கு அறுவை சிகிச்சை நடைபெறவுள்ளது.
முன்னதாக, இந்தியா வருவதற்கு விஷா தொடர்பான பிரச்சினை இருப்பதாக கூறி எமான் அகமது மத்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜிடம் உதவி கோரினார். மருத்துவ சிகிச்சை தொடர்பான பிரச்சினை என்பதால் அவருக்கு உடனடியாக இந்தியா வருவதற்கு சுஷ்மா உதவினார் என்பது குறிப்பிடத்தக்கது.