• Download mobile app
25 Nov 2024, MondayEdition - 3211
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கடன் தவணை செலுத்த முடியாமல் டாக்ஸி ஓட்டுநர் தற்கொலை

February 13, 2017 தண்டோரா குழு

காருக்கு வாங்கிய கடனுக்குரிய தவணையைச் செலுத்த இயலாமல் விரக்தியில் ஊபர் டாக்ஸி ஓட்டுநர் தற்கொலை செய்துகொண்டார்.

இது குறித்து போலீசார் தெரிவித்ததாவது:

ஹைதராபாத் பேகம்பேட்டையைச் சேர்ந்தவர் கொண்டையா (34). இவர் ஊபர் வாடகை டாக்சி நிறுவனத்தின் வாடகை கார் ஓட்டுநராகத் தன்னைப் பதிவு செய்திருந்தார். அதற்காக டாடா நிறுவனத்தில் கடன் பெற்று, காரை வாங்கி ஓட்டிக் கொண்டிருந்தார்.

இவர் காருக்கான கடனுக்குரிய தவணையாக மாதந்தோறும் ரூ.20 ஆயிரம் செலுத்த வேண்டும். ஓரிரு மாதங்களில் தவணையை சரியாகச் செலுத்தி வந்தார். கடனை அடைப்பதற்காக அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக கூடுதல் நேரம் காரை ஓட்டினார். இருந்தபோதும், அவருக்குப் போதிய வருமானம் இல்லை. ஊபர் நிறுவனத்தில் இருந்து சரியாக சம்பளம் வருவதில்லை. தவணையைச் செலுத்த முடியாமல் மிகவும் அவதியடைந்தார்.

இந்நிலையில், நிதி நிறுவன அதிகாரிகள் அவருடைய வீட்டிற்கு வந்து பணத்தை திருப்பி தரவேண்டும் என்று கூறி வந்ததால் அவர் மன உளைச்சலுக்கு ஆளானார். மாத தவணையைச் செலுத்த முடியவில்லை என்று தன் நண்பர்களிடம் கூறி வந்துள்ளார்.

இந்நிலையில் சம்பவத்தன்று கொண்டையா விஷம் அருந்திய நிலையில் வீட்டில் இருந்தார். உடனே மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் அங்கு உயிரிழந்தார்.

இவ்வாறு போலீசார் கூறினர்.

கடன் தவணை செலுத்த இயலாமல் கொண்டையா தற்கொலை செய்தது குறித்து அறிந்த ஊபர் மற்றும் ஓலா டாக்ஸி நிறுவன ஓட்டுநர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

“அவருடைய தற்கொலை மற்றும் கடன் பிரச்சினைக்கு ஊபர் மற்றும் டாட்டா நிதி நிறுவனம்தான் காரணம். கொண்டையா வீட்டில் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டார். அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். ஆனால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்” என்று போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

“உதன் நிதி திட்டத்திற்கு கீழ் ஊபர் மற்றும் டாட்டா நிதி நிறுவனத்தின் உதவியுடன் ஏழு மாதங்களுக்கு முன் டாக்ஸி ஒன்றை வாங்கினார். ஒவ்வொரு மாதமும் ரூ.2௦,௦௦௦ தவணை செலுத்த வேண்டும். அவருக்கு அதிக சம்பளமும் கிடையாது. முதல் மூன்று மாதங்கள் தவணை முறையை செலுத்தினார். ஆனால் அடுத்த நான்கு மாதங்கள் அவரால் பணத்தை செலுத்த முடியவில்லை” என்று கொண்டையாவின் உறவினர் தெரிவித்தார்.

இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் படிக்க