February 15, 2017 தண்டோரா குழு
சீனாவில் நிலத்திலும் தண்ணீரிலும் இயங்கும் உலகின் மிகப் பெரிய விமானம் இயந்திர சோதனைகளை வெற்றிகரமாக முடித்துவிட்டது. 2௦17ம் ஆண்டின் முதல் பாதியில் அதனுடைய முதல் பயணத்தைத் தொடங்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
சீனாவின் கோங்க்டோங் மாகணத்தில் தென்கிழக்கு பகுதியில் உள்ள ஷூஹாய் என்னும் இடத்தில் விமானங்களை உற்பத்தி செய்யும் இடம் உண்டு. அந்நிலையத்திலிருந்து நிலத்திலும் தண்ணீரிலும் பறக்கும் விமானம் தயார் செய்யப்பட்டது. அதற்கு ஏஜி6௦௦ என்று அதிகாரபூர்வமாக அழைக்கப்பட்டது. 2௦16ம் ஆண்டு ஜூலை மாதம் தயாராகி வெளியே வந்த விமானத்தில் பல கடுமையான சோதனைகள் தொடர்ந்து நடத்தப்பட்டது.
சீனா ஏவியேஷன் தொழில் பொது விமான கம்பெனி லிமிடெட் நிறுவனத்தை மேற்கோள் காட்டி, அரசு நடத்தும் சின்குவா செய்தி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில்,
“பிப்ரவரி 11 மற்றும் 13ம் தேதி இடையை விமானத்தின் நான்கு இயந்திரத்தில் நடைபெற்ற சோதனையில் நான்கும் குறைப்பாடற்று வேலை செய்தது. 37 மீட்டர் நீளமும், விமானத்தின் இறக்கை 38.8 மீட்டர் நீளமும் கொண்ட இந்த விமானம் நிலத்திலும் தண்ணீரிலும் பறக்கும் உலகின் மிக பெரிய விமானம் ஆகும். இது போயிங் 737 ரக விமானம் போல் இருக்கும். அவசர காலத்தில் செயல்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
முதல் முறையாகப் பறக்கும் இந்த விமானம் 53.5 டன் எடையைக் கொண்டதும் 2௦ நொடிகளில் 12 டன் தண்ணீரைச் சேகரிக்க முடியும். 7௦ விமானக் கூறு உற்பத்தியாளர்கள் மற்றும் ஆராய்ச்சிக் குழுவைச் சேர்ந்த ஏழு ஆண்டு கடின உழைப்பின் விளைவுதான் இந்த விமானம். விமானத்தில் பயன்படுத்தப்பட்ட பொருள்களில் 9௦ சதவீதம் சீனாவால் தயாரிக்கப்பட்டவை. 17 உத்தரவாதம் பெற்றுள்ளது” என்று அந்த அறிக்கை கூறியுள்ளது.