February 17, 2017 தண்டோரா குழு
தமிழக சட்டப் பேரவையில் சனிக்கிழமை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை கோரும்போது, பேரவை உறுப்பினர்களிடம் ரகசியமான முறையில் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ஓ.பி.எஸ். ஆதரவான முன்னாள் அமைச்சர்கள் தலைமைச் செயலகத்தில் சட்டப் பேரவைத் தலைவர் தனபாலை வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினர். அப்போது இந்தக் கோரிக்கையை வலியுறுத்தினர்.
முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், எம்.எல்.ஏ-க்கள் “மாஃபா” பாண்டியராஜன், செம்மலை ஆகியோர் சட்டப் பேரவைத் தலைவர் தனபாலை வெள்ளிக்கிழமை காலையில் சந்தித்தனர்.
அப்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு சனிக்கிழமை சட்டப் பேரவையில் நடைபெறும்போது ரகசிய நம்பிக்கை வாக்கெடுப்பு முறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்தனர்.