February 17, 2017 தண்டோரா குழு
ஹிமாச்சலப் பிரதேச மாநிலத்தில் பள்ளி வாகனம் பள்ளத்தில் விழுந்தது. அதில் பயணம் செய்த 31 மாணவர்கள் பலத்த காயமடைந்தனர். இந்த விபத்து மண்டி மாவட்டத்தில் தேகார் நகர் அருகில் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 17) நேர்ந்தது.
“மண்டி மாவட்டத்தின் தலைநகர் மண்டியில் இருந்து 45 கிலோமீட்டர் தூரத்தில் தேகார் நகர் அருகே அந்தப் பள்ளி வாகனம் சென்றுகொண்டிருந்து. பள்ளி மாணவர்களை ஏற்றிக்கொண்டு வந்த வாகனம் சாலையிலிருந்து நிலை தடுமாறி, 25 மீட்டர் ஆழம் உள்ள பள்ளத்தில் விழுந்தது. அதில் இருந்த டிரைவர், ஆசிரியர் உள்பட 31 பயணிகள் இருந்தனர். காயமடைந்தவர்கள் மண்ட்வாயர் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்தவர்கள்.
சம்பவம் நடந்த பகுதிக்கு அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர்கள் விபத்தில் சிக்கியவர்களை மீட்க உதவினர். காயமடைந்த மாணவர்களை மருத்துவமனைக்கு கொண்ட செல்ல உதவினர். விபத்தி்ல் சிக்கிய இருவர் மண்டி பிராந்திய மருத்துவமனையிலும் மற்ற 23 பேர் சுந்தர்நகர் மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டுள்ளனர்” என்று சுந்தர்நகர் மாவட்ட துணை ஆட்சியர் ராஜீவ் குமார் கூறினார்.
விபத்துக்கான காரணம் என்ன என்று தெரியவில்லை. எனினும், விபத்தை நேரில் பார்த்த ஒருவர், “சாலை விரிவாக்கப் பணியின்போது சாலையில் பெரிய குழி இருந்தது குறித்து, அங்கு இருந்தவர்களிடம் பேசிக்கொண்டு வண்டியை ஓடியதால் கட்டுப்பாட்டை இழந்து இந்த விபத்து நேர்ந்தது” என்று கூறினார்.
மண்டி மாவட்டத்தின் நிர்வாகம் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.