February 20, 2017 தண்டோரா குழு
உத்தரப் பிரதேசம், ஃபெரோஸாபாத் அருகே காளிந்தி எக்ஸ்பிரஸ் திங்கள்கிழமை (பிப்ரவரி 2௦) அதிகாலையில் தடம் புரண்டது. இந்த விபத்தில் நல்லவேளையாக உயிர்ச் சேதமோ, யாருக்கும் காயமோ ஏற்படவில்லை.
ஃபெரோஸாபாத் அருகில் உள்ள டுண்ட்லா என்னும் இடத்தில் எதிரே வந்த சரக்கு ரயிலுடன் காளிந்தி எக்ஸ்பிரஸ் நேருக்கு நேர் மோதியதை அடுத்து, தடம்புரண்டது. இதில் அதிர்ஷ்டவசமாக உயிர்ச் சேதமோ, யாருக்கும் காயமோ ஏற்படவில்லை.
ரயில்வே அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “காளிந்தி எக்ஸ்பிரஸ் கான்பூர் சென்டரல் ரயில்நிலையம் – ஹரியானா மாநிலம் பிவானி ரயில் நிலையம் இடையில் இயக்கப்படுகிறது. இந்த எக்ஸ்பிரஸும் சரக்கு ரயிலும் திங்கள்கிழமை நேருக்கு நேர் மோதிக் கொண்டன. விபத்தில் ரயிலின் என்ஜின் மற்றும் முதல் பயணிகள் ரயில் பெட்டிகள் தடம்புரண்டன. இந்த விபத்தால் ரயில் போக்குவரத்து சில மணி நேரம் பாதிக்கப்பட்டது.
இந்த வழியே செல்லவேண்டிய மற்ற ரயில்களை ஆக்ரா மற்றும் காஸியாபாத் வழியாகத் திருப்பிவிடப்படுகின்றன” என்று ரயில்வே துறை தெரிவித்துள்ளது.