• Download mobile app
25 Nov 2024, MondayEdition - 3211
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

“மேட்டுப்பாளையம் நகராட்சிக் கட்டடத்தை திறந்திடுங்கள்”

February 21, 2017 ஜாகர்

மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களால் திறந்து வைக்கப்பட்ட மேட்டுப்பாளையம் நகராட்சி புதிய கட்டடம் இன்னும் மக்கள் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது என்று அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சி பகுதியில் 33 வார்டுகள் உள்ளன. சுமார் ஒன்றரை லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். தற்போது மேட்டுப்பாளையம் நகராட்சி கட்டடம் சிறுமுகை சாலையில் உள்ள வணிக நிறுவனத்தின் கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது.

மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு சுமார் நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். வார்டு வாரியாக நகராட்சி பணிகளின் கோப்புகளை வைக்கவும், பணிபுரியும் ஊழியர்களுக்கும், வந்து செல்லும் பொதுமக்களுக்கும் போதிய இடவசதி இல்லை.

இதனால், மேட்டுப்பாளையம் நகராட்சிக்குப் புதிய கட்டடம் கட்டித் தரவேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அதனை அடுத்து நகராட்சிக்கு புதிய கட்டடம் கட்ட திட்ட மதிப்பீடு செய்து நிதி ஒதுக்கப்பட்டது. 2011 ஆம் ஆண்டு மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு உள்பட்ட ஹவுசிங் யூனிட் பகுதியில் இடம் தேர்வு செய்யப்பட்டது. நகராட்சிக் கட்டடம் கட்ட 3 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.

2௦15-ம் ஆண்டு இறுதியில் மேட்டுப்பாளையம் நகராட்சிக்குப் புதிய கட்டடம் கட்டி முடிக்கப்பட்டது. இந்த புதிய கட்டடத்தை மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 2௦16 செப்டம்பர் மாதம் 21 ஆம் தேதி காணொளிக் காட்சி மூலம் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சட்டப் பேரவை உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்று நகராட்சி திறப்பு கல்வெட்டினைத் திறந்து வைத்தனர்.

ஆனால், இந்த நகராட்சி புதிய கட்டடம் இதுவரை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்படமாலேயே உள்ளது.

இது குறித்து நகராட்சி அலுவலர் ஒருவர் கூறுகையில்,

“தற்போதுள்ள நகராட்சி கட்டடத்தில் ஆவணங்கள் உள்ளிட்டவை வைப்பதற்குப் போதிய இடவசதி இல்லை. இதனால் அவை ஒரே அறையில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு அறையில் மின்கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டு சில ஆவணங்கள் எரிந்து போய்விட்டன” என்றார்.

இது குறித்து அப்பகுதியில் வசித்து வரும் ராஜ்குமார் கூறுகையில்,

“பொதுமக்கள் வந்து செல்ல மிகவும் சிரமமாக உள்ளது. வாகனம் நிறுத்துவதற்கு கூட இடவசதியில்லாமல் தவித்து வருகின்றோம். இந்த காரணத்தினால் அலுவலகப் பணிகளை மேற்கொள்ள அலுவலர்கள் தாமதம் செய்கின்றனர். இதானல் நகராட்சி பணிகளில் தொய்வு ஏற்பட்டு பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். புதிய கட்டத்தை விரைந்து தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

“நகராட்சி அலுவல பணிகளைக் கவனிப்பதற்குப் போதிய இடவசதி இல்லாத காரணமாகவே இந்த புதிய கட்டடம் கட்டபட்டது. ஆனால் வேலைகள் முடிந்த பிறகும் தற்போது வரை அந்த புதிய கட்டடத்தை அதிகாரிகள் ஏன் திறக்கவில்லை?” என்று பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

இது குறித்து மேட்டுப்பாளையம் நகராட்சித் தலைவர் (பதவி காலம் முடிந்தது) சதீஷ்குமார் கூறுகையில்,

“புதிய கட்டடத்தைத் திறக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், புதிய கட்டத்தை திறப்பதற்காக சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு நேரிடும்” என்றார்.

மேலும் படிக்க