‘கபாலி’ வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் பா.ரஞ்சித் – சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் புதுப் படத்துக்காக மீண்டும் கூட்டணி அமைத்துள்ளனர்.
தற்போது இப்படத்தின் கதை எழுதும் பணியில் தீவிரம் காட்டி வந்த இயக்குனர் பா.ரஞ்சித், பட கதாப்பாத்திரங்களை தேர்வு செய்வதில் முனைப்புக் காட்டி வருகிறார். அதன்படி, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியான பிரபல பாலிவுட் நாயகி வித்யா பாலனை நடிக்க வைக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக கபாலி திரைப்படத்துக்கே ரஜினிக்கு ஜோடியாக வித்யாபாலனை ஒப்பந்தம் செய்ய முயற்சித்ததாகவும், அதன் பிறகு தான் ராதிகா ஆப்தேவை நடிக்க வைத்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், வித்யாபாலனை சந்தித்த படக்குழு ரஜினிகாந்துக்கு ஜோடியாக வித்யாபாலனை இறுதி செய்ததாக கூறப்படுகிறது. எனினும், இன்னும் அவரது தேதிகள் குறித்த பேச்சு நடைபெற்று வருவதால், அவர் கையெழுத்திட்டபின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
நடிகரும், தயாரிப்பாளருமான தனுஷ் தயாரிப்பில் உருவாகவிருக்கும் இப்படம், ‘கபாலி’ திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கலாம் என்று யூகித்து வருகின்றனர். எனினும், அது குறித்த தகவலும் விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
திருப்பூரில் பிரத்யேக வைர மற்றும் தங்க ஆபரண ஷோரூமை க்ளோ பை கீர்த்திலால்ஸ் தொடங்கியுள்ளது
கோவை டிரினிட்டி கண் மருத்துவமனையில் அதிநவீன கான்டோரா லாசிக் அறுவை சிகிச்சை அறிமுகம்
தொழில்நுட்ப முன்னேற்றத்துடன் தமிழகத்திலும் கேரளாவிலும் ப்யூர் பவர் அறிமுகம்
கோவை நரசிம்மநாயக்கன்பாளையத்தில் தன ஆகர்ஷன மகாலட்சுமி குபேரர் சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபாடு
சத்குருவின் தமிழ் புத்தாண்டு வாழ்த்து!
தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சியின் கோவை மத்திய மாவட்ட பொதுக்குழு கூட்டம்