February 24, 2017 தண்டோரா குழு
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளான வெள்ளிக்கிழமை ஆர்.கே. நகரில் உள்ள அவரின் படத்திற்கு மரியாதை செலுத்திவிட்டு தொண்டர்கள் மத்தியில் ஓ. பன்னீர்செல்வம் பேசினார்.
தொண்டர்கள் மத்தியில் அவர் பேசியதாவது:
ஒரு குடும்பத்தின் பிடியில் சிக்கியுள்ள கட்சியை மீட்கவே இந்த தர்ம யுத்தத்தைத் தொடங்கியுள்ளோம். இதில் வெற்றி பெறப்போவது நாம் தான்.
ஜெயலலிதா எண்ணத்துக்கு எதிராக கட்சியும் ஆட்சியும் ஒரு குடும்பத்தின் கையில் சென்று விட்டது. மேலும், பிறந்த நாளில் என் வீட்டிற்கு வர வேண்டாம். “ஏழைகளின் வீடு தேடிச் செல்லுங்கள்” என்று அம்மா கூறுவார்.
இந்தியாவிலேயே அப்படிப்பட்ட ஒரே உன்னத தலைவர் நம்முடைய அம்மாதான். ஜெயலலிதாவின் மரணம் குறித்து நீதி விசாரணை நடக்கும் வரையிலும், அதிமுக தொண்டர்களிடம் கட்சியும் ஆட்சியும் வரும் வரை நமது தர்மயுத்தம் தொடரும்.
இவ்வாறு ஓ.பி.எஸ். பேசினார்.