• Download mobile app
26 Nov 2024, TuesdayEdition - 3212
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கடல் கடந்த தமிழக முதல்வர் பிறந்தநாள்.

March 3, 2016 வெங்கி சதீஷ்

தமிழக முதல்வரின் பிறந்தநாளை தமிழகம் முழுவதும் அவரது தொண்டர்கள் விதவிதமாக கொண்டாடினர். இரத்ததானம், மண்சோறு, தீச்சட்டி உள்ளிட்ட அனைத்துச் செயல்களையும் செய்துள்ளனர்.

இந்நிலையில் முதல்வரின் பிறந்தநாளை கடல் கடந்து மலேசியாவில் கொண்டாடியுள்ளார் சேலம் மாவட்ட ஊராட்சி கவுன்சிலரும் வழக்கறிஞருமான மணிகண்டன். இவர் மலேசியாவில் உள்ள பத்துமலை விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை மற்றும் யாகத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார்.

இதில் இந்தியா மற்றும் மலேசியாவின் கட்டமைப்புத் துறையின் சிறப்பு தூதர் டத்தோஸ்ரீ உத்தாமா ச.சாமிவேலு தலைமையேற்றார். மேலும் அவரது துணைவியாரும் தமிழ்நேசனின் வாரியத் தலைவருமான டத்தின்ஸ்ரீ உத்தாமா இந்திராணி சாமிவேலு அவர்கள் அன்னதானத்தைத் துவங்கிவைத்தார்.

இந்தப் பிறந்தநாள் சிறப்பு பூஜையில் பத்துமலை கோவில் பள்ளியில் இருந்து மாணவ மாணவிகள் மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இதே போல துபாயில் உள்ள தமிழர்களாலும் முதல்வரின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க