March 2, 2017 தண்டோரா குழு
ரஷ்ய நாட்டில் கொண்டாடப்படும் “அப்பம் தின”த்தின்போது, சமையல் கலை நிபுணர்கள் 16 பேர் சேர்ந்து, 12,716 அப்பம் செய்து கின்னஸ் உலக சாதனை புரிந்துள்ளனர்.
“எப்பொழுதும் விபூதி புதன்” என்னும் பண்டிகையைத் தொடர்ந்து ஈஸ்ட்டர் காலம் தொடங்கும். பிப்ரவரி அல்லது மார்ச் மாதங்களில் கொண்டாடப்படும் இந்த நாளுக்கு முன் ‘ஷ்ரோவ் செவ்வாய்க்கிழமை’ என்னும் நாளைக் கொண்டாடுவது வழக்கம்.
ஈஸ்ட்டர் விழாவிற்கு ஆயத்தம் செய்ய தரப்பட்டுள்ள 40 நாட்கள் நாட்களில் கிறிஸ்துவ மக்கள் உண்ணாநோன்பு மற்றும் அசைவ உணவுகளைத் தவிர்த்து விடுவர். இந்த 40 நாட்களை ‘லேண்ட் காலம்’ என்று அழைப்பர்.
கடந்த காலங்களில், அலமாரிகளில் வைக்கப்பட்டுள்ள சர்க்கரை, முட்டைகள், கொழுப்புச் சத்து பொருள்கள் ஆகியவற்றை வீணடிப்பதைத் தவிர்க்கவும், மனத்தில் சலனம் ஏற்படாமல் இருக்கவும் இதுபோன்ற உணவு வகைகளைத் தவிர்ப்பது அவசியமாக இருந்தது. இங்கிலாந்து, அயர்லாந்து, ஆஸ்திரேலியா, நியூஜிலாந்த், கனடா ஆகிய நாடுகளில் ‘அப்பம் தினம்’ ஆரம்பிக்கப்பட்டது.
லேண்ட் நாட்கள் தொடங்கும் 7 நாட்களுக்கு முன்பாக, ‘மச்லேனிகா’ என்னும் மத மற்றும் நாட்டுப்புற விடுமுறை ரஷ்யாவில் கொண்டாடப்படுவதுண்டு. மேலும், குளிர்காலம் முடிவுக்கு வருகிறது என்பதைக் காட்டும் விழாவாக இந்தக் கொண்டாட்டம் இருக்கிறது.
இந்த ஆண்டு, அப்பங்கள் பெரிய அளவில் பரிமாறுவதில் கின்னஸ் உலக சாதனை நிகழத்த முயற்சிக்கும் வகையில், ரஷ்யாவின் மாவு ஏற்றுமதியாளர் ஜேஎஸ்சி மாக்பா இந்த ஷ்ரோவ் செவ்வாய்க்கிழமை நாளில் முடிவு செய்தார்.
இதையடுத்து, மொஸ்கோ நகரில் உள்ள பொதுக் கலைக்கூடம் எதிரில் ஒரு பெரிய கூடாரம் அமைக்கப்பட்டு, சமையல் கலையின் 16 நிபுணர்கள் ஒன்று சேர்ந்து இந்த சாதனையைச் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர்.
அப்பத்திற்குத் தேவையான மாவை இரவே தாயார் செய்ய வேண்டும். போட்டியின் நாளின் அப்பத்தை அந்த இடத்திலேயே செய்து, சுடச்சுட உணவை மக்களுக்குப் பரிமாற வேண்டும் என்பது விதிமுறை.
அதன்படி, அவர்களும் தயாரித்தனர். போட்டியின் முடிவில், கின்னஸ் உலக சாதனை அமைப்பைச் சேர்ந்த லூசியா சினிகாக்லிஏசி மற்றும் க்லென் போல்லார்ட் அப்பத்தை எண்ணிச் சரிபார்த்தனர்.
இறுதியாக, 8 மணிநேரம் நிறுத்தாது வேலை செய்து அப்பம் தயாரித்த ‘மாக்பா அணி’ 12,716 அப்பம் செய்து கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.