March 2, 2017 தண்டோரா குழு
அமெரிக்காவில் இந்தியப் பொறியாளர் ஸ்ரீனிவாஸ் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் தலைவர் பவுல் ரையன் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது இரங்கல் செய்தியை அமெரிக்காவில் உள்ள இந்திய வெளியுறவுத் துறைச் செயலர் எஸ். ஜெயசங்கரிடம் தெரிவித்துள்ளார்.
ஹைதராபாதைச் சேர்ந்த ஸ்ரீனிவாஸ் அமெரிக்காவில் உள்ள கன்சாஸ் நகரில் இனவெறியனால் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது உடல் இந்தியா கொண்டுவரப்பட்டு, ஹைதரபாதில் திங்கள்கிழமை தகனம் செய்யப்பட்டது.
இதனிடையில் அமெரிக்காவுக்கு வந்துள்ள இந்திய வெளியுறவுத் துறைச் செயலர் ஜெயசங்கரை அமெரிக்க பிரதிநிதிகள் சார்பாக நாடாளுமன்ற அவையின் தலைவர் பவுல் ரையன் சந்தித்தார். அப்போது, இறந்த பொறியாளர் ஸ்ரீனிவாஸ்யுடைய குடும்பத்தினருக்கு தனது இரங்கலை தெரிவித்துக் கொண்டார்.
அமெரிக்க கடற்படையை ஆதாம் புரிண்டன் என்ற வெறியன் அவரைச் சுட்டுக் கொன்றிருக்கிறார். சம்பவத்தின்போது, அலோக் மடசானி என்ற இந்தியர் காயமடைந்தார். “என் தேசத்தை விட்டு வெளியேறு” என்று கத்திக்கொண்டு தன்னிடம் இருந்த துப்பாக்கியால் அவர்களை சுட்டுள்ளார்.
ஸ்ரீனிவாஸை அந்த வெறியன் சுட்டுக் கொன்றது அபத்தமான செயல் என்று கண்டித்தார். அத்துடன் ஸ்ரீனிவாஸ் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவிப்பதாகவும் ரையன் கூறினார்.
“நம்முடைய மக்கள் ஒற்றுமையாக நிற்கவேண்டும்” என்று ரையன் பவுல் தெரிவித்தார்.அமெரிக்க வந்த இந்திய வெளியுறவு செயலாளர் எஸ். ஜெய்ஷங்கரை சந்தித்து, ஸ்ரீநிவாசை அபத்தமாக கொலை செய்துவிட்டான் அந்த குற்றவாளி. அவருடைய குடும்பத்துக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொண்டார்.
அமெரிக்காவுக்கு அரசுமுறையாக வந்துள்ள ஜெய்சங்கர் இந்திய அமெரிக்க நாடுகளுக்கு இடையிலான திட்ட உடன்பாடுகள் குறித்து அதிபர் டிரம்ப் அலுவலக அதிகாரிகளுடன்ஆலோசனை மேற்கொள்கிறார்.