March 3, 2017 தண்டோரா குழு
கோவை புலியகுளத்தில் விபத்துக்குள்ளான மணல் லாரியை மீட்கச் சென்ற கிரேன் வாகனம் கீழே விழுந்ததில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த வாலிபர் சிவகுமார் பலி.
கோவை பீளமேடு பகுதியிலிருந்து செட்டிபாளையம் பகுதிக்கு மணல் ஏற்றிச் சென்ற லாரி புலியகுளம் அருகே பழைய தாமு நகர் பகுதியில் வந்துகொண்டிருந்தபோது முன்சக்கரம் பழுதாகி சாலையிலிருந்த தடுப்பு சுவர் மீது மோதியது.
விபத்துக்குள்ளான மணல் லாரியை மீட்க வந்த கிரேன் வாகனம், மணல் லாரியை மீட்கும்போது பாரம் தாங்காமல் நிலை தடுமாறி கிழே விழுந்தது.
அப்போது சாலையோரம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அதே பகுதியைச் சேர்ந்த பெயிண்டர் தொழிலில் செய்து வரும் சிவகுமார் என்ற வாலிபர் மீது கிரேன் வாகனம் விழுந்ததில் சம்பவ இடத்திலேயே அவர் பலியானார்.
மேலும் ஒரு முதியவர் படுகாயமடைத நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டிருக்கிறார். போக்குவரத்து நெரிசல் நிறைந்த சாலையில் விபத்து நடந்ததால் அந்த பகுதியில் அரை மணிநேரத்திற்கு மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இச்சம்பவம் குறித்து கோவை இராமநாதபுரம் ‘டி1’ காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தப்பி ஓடிய கிரேன் ஓட்டுநரைக் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.