March 4, 2017 தண்டோரா குழு
வீட்டில் குழந்தைகள் அதிக குறும்பு செய்யும்போது, பெற்றோர்கள் அவர்களை அடிப்பர். அதே போல் பள்ளியில் குழந்தைகள் தவறு செய்யும் போது, தண்டனை தருவது வழக்கம். ஆனால், சமீபமாக பிள்ளைகளுக்குத் தண்டனை என்ற பெயரில் மன ரீதியாக, உடல் ரீதியாக பல பிரச்சனைகள் உண்டாகின்றன.
இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்படாமல் இருக்க ஜிம்பாப்வே நாட்டில் புதிய சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
கிழக்கு ஆப்ரிக்க நாடான ஜிம்பாப்வேவில் பள்ளி குழந்தைகளை அடிப்பது அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்றும் அவ்வாறு செய்தால் சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள்.
வீட்டிலும் பள்ளியிலும் உடல் ரீதியான தண்டனையைத் தருவதற்கு உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்தத் தடைக்கு அரசியலமைப்புச் சட்டம் நீதிமன்ற ஒப்புதல் அளிக்க வேண்டும்.
குழந்தைகள் பள்ளியில் செய்யும் சிறிய தவறுகளுக்காக ஆசிரியர்கள் அடிப்பதற்கான அடையாளங்களைக் கண்டு பெற்றோர்கள் மிகுந்த கோபம் கொண்டுள்ள நிலையின் விளைவாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
லினா ஃபுங்வா என்ற பெண் தன் மகளின் உடலில் தீக் காயங்கள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அவர், அது குறித்து விசாரித்தபோது, பள்ளி ஆசிரியரால் ஏற்பட்டது என்று தெரிவித்தாள். உடனே லினா குழந்தைகள் உரிமை அமைப்பின் உதவியுடன் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். வழக்கை நீதிபதி டேவிட் மன்கோடா விசாரித்தார்.
“உடல் வன்முறை அல்லாத மற்ற தண்டனைகள் மூலம் ஆசிரியர்களும் பெற்றோர்களும் குழந்தைகளுக்கு ஒழுக்கத்தை கற்பிக்கலாம்” என்று தீர்ப்பளித்தார்.
ஜிம்பாப்வே நாட்டின் குழந்தைத் திருமணங்களுக்குத் தடைவிதித்ததை அடுத்து இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது குறிப்பிடத்தக்கது.