March 4, 2017 தண்டோரா குழு
பாபுவா நியூ கினியா நாட்டின் 6.3 ரிக்டர் அளவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் சனிக்கிழமை (மார்ச் 4) பதிவாகியுள்ளது. எனினும், சுனாமி எச்சரிக்கை பிறப்பிக்கப்படவில்லை.
அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், “பாபுவா நியூ கினியா நாட்டின் 6.3 ரிக்டர் அளவு கோள் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் சனிக்கிழமை(மார்ச் 4) பதிவாகியுள்ளது. அந்நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள பௌகைன்விள்ளே தீவில் என்னும் இடத்திலிருந்து 12௦ கிலோமீட்டர் (75 மையில்) தூரத்தில் மையம் கொண்டிருந்தது.
இந்த நிலநடுக்கதால் சுனாமி எச்சரிக்கை பிறப்பிக்கப்படவில்லை. இதனால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் இழப்புகள் குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை” என்று தெரிவித்தது.