• Download mobile app
25 Nov 2024, MondayEdition - 3211
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

விசித்திர நாய் மாவெரிக்

March 6, 2017 தண்டோரா குழு

நம் வீட்டில் உள்ள செல்ல நாய்கள் செய்யும் சேட்டைகள் சில நேரத்தில் நமக்குக் கோபத்தையும் சில நேரத்தில் சிரிப்பையும் வரவழைக்கும். அவற்றை விட்டில் தனியே விட்டுவிட்டு வெளியே சென்று வருவதற்குள் மனம் அல்லோல்பட்டுவிடும். அவை செய்யும் சேட்டையால் வீடு தலைகீழாக மாறிவிடும் நிலைமை ஏற்படுவதில் சந்தேகமில்லை.

ஆனால், அமெரிக்காவில் மாவெரிக் என்னும் நாயை வீட்டுக் கூரையிலிருந்து ஒரு மணி நேரத்தில் இரண்டு முறை கீழே இறக்க வேண்டியுள்ளது.

பென்ஸ்சில்வானியா மாநிலத்தில் உள்ள நான்டிக்கோக் என்னும் நகரின் தீயணைப்பு படைக்கு 911 அவரச அழைப்பு வந்துள்ளது. ஒரு நாய் வீட்டின் கூரையில் இருக்கிறது என்று அப்பகுதியில் வசிப்பவர் கூறியுள்ளார். உடனே, தீயணைப்பு வாகனமும் வீரர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வீட்டின் கூரை மேலிருந்த நாயைக் காப்பாற்றி, கீழே கொண்டு வந்து அதன் வீட்டில் விட்டனர்.

ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, அதே பகுதியிலிருந்து மற்றொரு தொலைபேசி அழைப்பு வந்ததை கண்டு தீயணைப்பு வீரர்கள் குழப்பம் அடைந்தனர். தாங்கள் காப்பாற்றிய அதே நாய் மீண்டும் கூரையில் இருந்தது.

“நாங்கள் அங்கு சென்று பார்த்தபோது, அந்த நாய் எங்களையே பார்த்துக் கொண்டிருந்தது” என்று நான்டிக்கோக் தீயணைப்பு தலைவர் மார்க் போன்கால் கூறினார்.

அலாஸ்கா நாட்டின் மலாமூட் என்னும் இனத்தை சேர்ந்த 15௦ கிலோ எடையுள்ள மாவெரிக்கின் உரிமையாளர் பணிக்குச் சென்றுவிட்டார். வீட்டை விட்டு வெளியே வரவேண்டும் என்பதறாக வீட்டின் ஜன்னலை திறந்துகொண்டு வெளியே வந்துவிட்டது.

“இது போன்ற பணியைச் செய்வதால், இங்கு எதுவும் சாத்தியம், எதுவும் நடக்கும்” என்று தீயணைப்பு வீரர் டேன் ஆக்ஸ்டாகல்னிஸ் கூறினார்.

அதனுடைய உரிமையாளர் கூறுகையில், “மாவெரிக் இவ்வாறு செய்வது இது முதல் தடவை அல்ல. நாங்கள் மாவெரிக்கை ஒரு பெண்ணிடமிருந்து வாங்கினோம். அவன் ஒரு வித்தைக்காரன் என்று அந்த பெண் கூறினாள். அவளிடமும் இது போன்ற வித்தைகளைக் காட்டியுள்ளது” என்றார்.
வெளிய செல்லும்போது, மாவெரிக் இவ்வாறு குறும்பு செய்யாமல் இருக்க ஜன்னல்களையும் மூடிவிட்டு செல்லத் திட்டமிட்டுள்ளார் அதன் உரிமையாளர்.

சமூக வலைதளங்களில் உள்ள மக்கள் மாவெரிக் செய்யும் இந்த குறும்புகளைப் பார்த்து மகிழ்கின்றனர். “குறும்புக்கார நாய்க்குப் புதிய காற்று தேவைப்படுகிறது” என்று ஃபேஸ் புக் பயனர் தெரிவித்தார்.

“என்னுடைய நாய், வீட்டின் ஜன்னலைத் திறந்துகொண்டு, எங்கள் வீட்டின் சுற்றுப் புறங்களில் சுற்றிக்கொண்டு, நான் மாலை வீடு திருமபும்போது வீட்டிற்கு வந்துவிடும்” என்று மற்றொரு பயனர் தெரிவித்தார்.

மேலும் படிக்க