• Download mobile app
25 Nov 2024, MondayEdition - 3211
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஐ.என்.எஸ். விராட் ஓய்வு பெறுகிறது

March 6, 2017 தண்டோரா குழு

இந்திய கடற்படையின் விமான தாங்கி கப்பலான ஐ.என்.எஸ். விராட் மும்பையிலிருந்து திங்கள்கிழமை ஓய்வு பெறுகிறது.

மூன்று தசாப்தங்களாக தேசத்தில் விமான தாங்கி கப்பலான பணியாற்றிய ஐ.என்.எஸ். விராட், திங்கள்கிழமை ஓய்வு பெறுகிறது. இதனால், இந்திய கடற்படை சரித்திரத்தில், ஒரு பெருமைக்குரிய அத்தியாயம் முடிவுக்கு வருகிறது.

இரண்டாம் உலக போர் நடந்துக்கொண்டிருந்த 1943ம் ஆண்டு, இந்த கப்பல் கட்டப்பட்டது. 1987ம் ஆண்டு ஐ.என்எஸ். விராட் இந்திய கடற்படையில் நியமிக்கப்பட்டது. அதற்கு முன்பு, சுமார் 27 ஆண்டுகள் ராயல் பிரிட்டிஷ் கடற்படையில் பணியாற்றியது இந்த வரலாற்று சிறப்பு மிக்க கப்பல். இந்திய நாட்டின் பல பதற்றமான சூழ்நிலைகளில், இந்த கப்பல் பலத்த பாதுகாப்பு அளித்தது.

இந்த போர் விமானத்தின் எதிர்காலம் குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. இதை ஒரு விடுதியாக, அருங்காட்சியகமாக அல்லது கடல்சார் சரித்திரத்தின் வழித்திடலாக மாற்றப்படலாம்.

“நான்கு மாதங்களுக்குள் இதை வாங்க ஒருவரும் இல்லையென்றால், அது மதிப்பற்றது என்று எண்ணி விற்கப்படும்”, என்று கடற்படை தலைவர் சுனில் லன்பா தெரிவித்தார்.

பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர் மற்றும் இதர பிரமுகர்கள் ஐ.என்.எஸ் விராட் கப்பலின் வழியனுப்பு விழாவில் கலந்துக்கொள்ளவர். 55 ஆண்டுகள் சேவை முடிவுக்கு வருகிறது என்பதை குறிக்கும் விதமாக, சூரிய அஸ்தமனம் வேளையில் போர் கப்பலில் பறந்து கொண்டிருந்த தேசிய கொடியை இறக்கி, மடித்து வைக்கப்படுவது, இந்த விழாவின் பெரும் நிகழ்வாக கருதப்படும்.

மேலும் படிக்க