March 8, 2017 தண்டோரா குழு
சர்வதேச மகளிர் தினத்தையொட்டி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.ஆண்டுதோறும் மார்ச் 8ம் தேதி சர்வதேச மகளிர் தினமாக உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டரில் பதிவிட்ட வாழ்த்து செய்தியில்,
“பெண்களின் அர்ப்பணிப்பு, சக்தி, மன உறுதி, அசைக்க முடியாத மனோதிடம் கொண்டவர்கள். அவர்களுக்கு தலை வணகுகிறேன்” என்று தெரிவித்தார்.
இந்திய குடியரசு தலைவர் வெளியிட்ட வாழ்த்து செய்தியில்,
“இந்தியாவிலும் உலகின் அனைத்து நாடுகளில் வாழும் பெண்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
தங்களுடைய ஒப்பற்ற இரக்கம், சகிப்புத்தன்மை, அன்பு, கடின உழைப்பு ஆகிய நற்பண்புகளுடன் நமது தேசத்தின் வளர்ச்சிக்கு, முன்னேற்றத்திற்கு தலைமுறை தலைமுறையாக அவர்கள் பங்களித்து வருகின்றனர்.
பாலின சமத்துவம் மற்றும் பெண்களின் உண்மை அதிகாரம் அளிக்க உறுதியாக செயல்ப்பட வேண்டும் என்பதற்காக இந்திய மக்களுக்கு அழைப்பு விடுக்கிறேன். அவர்களுக்கு ஆதரவு அளிக்க அனைத்து முயற்சிகளையும் அவர்களுக்கு சமர்ப்பிப்போம். இதன் மூலம் அவர்களுடைய முழு திறனை உருவாகவும், உத்வேகத்தை அறிந்து செயல்படவும், பாதுகாப்பு, கண்ணியம் மற்றும் தடங்கலற்ற சமத்துவம் ஆகியவை தான் அவர்களுக்கு புனிதமானவை.” என்று தெரிவித்தார்.
இந்தியாவின் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.