• Download mobile app
25 Nov 2024, MondayEdition - 3211
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

எழுத்துக்கூட்டு போட்டிக்கு தகுதி பெற்ற 5 வயது சிறுமி

March 8, 2017 தண்டோரா குழு

பிறக்கும் எல்லா குழந்தைகளும் மேதைகளாக அறிவாளிகளாக பிறப்பதில்லை. குழந்தைகளின் திறமைகளை பெற்றோர் கவனித்து அதில் அவர்களை உற்சாகப்படுத்தும் போது, அவர்கள் தங்கள் திறமைகளை பயன்படுத்த கற்றுக்கொள்கிறார்கள்.

அமெரிக்க நாட்டின் ஓக்லஹோமா மாநிலத்திலுள்ள டுல்சா நகரில் வசிக்கும் 5 வயது சிறுமியின் திறமை இதற்கு ஒரு எடுத்தக்காட்டாக உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும், அமெரிக்க நாட்டில் ஸ்க்ரிப்ஸ் என்னும் எழுத்துக்கூட்டு போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டி 1925-ம் ஆண்டு முதன் முதலில் நடைபெற்றது. அதை தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டு நடத்தப்பட்டு வருகிறது.

இவ்வாண்டில் நடைபெறும் தேசிய எழுத்துக்கூட்டு போட்டிக்கு 5 வயது சிறுமி தேர்வாகியுள்ளாள். அவளுடைய பெயர் எடித் புல்லர். அவன் தன் பெற்றோருடன் ஓக்லஹோமா மாநிலத்திலுள்ள டுல்சா நகரில் வசித்து வருகிறாள். இந்த போட்டியின் இளைய போட்டியாளரும் கூட. வீட்டிலேயே கல்வி கற்பிக்கப்பட்ட எடித் எழுத்துக்கூட்டுதலில் திறமை பெற்றிருந்தாள்.

“ரேச்டுரன்ட் என்ற வார்த்தையை அவளுக்கு கற்பிக்காமலேயே தவறின்றி எழுத்துக்கூடியதை கண்டு ஆச்சரியம் அடைந்தோம். அவளுக்குள் விசேஷ திறமை இருகிறது என்று தெரிந்துக்கொண்டோம்” என்று அவளுடைய தாய் அன்னி தெரிவித்தார்.

ஓக்லஹோமாவின் டுல்சா நகரில் சமிபத்தில் நடைபெற்ற ஸ்க்ரிப்ப்ஸ் கிரீன் கண்ட்ரி பிராந்திய எழுத்துக்கூட்டு போட்டி கடந்த வார இறுதியில் நடைபெற்றது. இந்த போட்டியில் கலந்துக்கொண்ட 5 முதல் 14 வரையுள்ள 5௦க்கும் மேற்பட்ட போட்டியாளர்களை தோற்கடித்தாள் எடித். இந்த போட்டியில் 37 வார்த்தைகளை எழுத்துக்கூட்ட வேண்டும்.

மே 3௦ முதல் ஜூன் 1 வரை வாஷிங்டன் டி.சியில் நடைபெறும் ஸ்க்ரிப்ப்ஸ் தேசிய எழுத்துக்கூட்டு போட்டி நடைபெறவுள்ளது. அந்த போட்டிக்கு எடித் செல்லவுள்ளாள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க