March 8, 2017 தண்டோரா குழு
வங்கி ஊழியர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்யும் புதிய வசதியை ஸ்டேட் பேங்க் ஆப் இந்திய அறிமுகப்படுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.
“வீட்டிலிருந்து வேலை” என்னும் புதிய கொள்கைக்கு அவ்வங்கியின் குழு ஒப்புதல் அளித்துள்ளது. வங்கியின் ஊழியர்கள் வீட்டில் இருந்தே தங்களுடைய கைபேசியை பயன்படுத்தி, வங்கியின் அவசர பணிகளை முடிக்கலாம்.
“கைபேசி கம்ப்யூடிங் தொழில்நுட்பங்களை வங்கி பயன்படுத்தும். அனைத்து செயல்படுத்தப்பட்ட சாதனங்களை வங்கி தொடர்ந்து தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும். கைபேசி சாதனங்களின் தரவு மற்றும் அதன் பயன்பாடுகள் காக்கப்படும்.
வங்கியில் வாடிக்கையாளர் தொடர்பு மேலாண்மை, சமூக ஊடக மேலாண்மை, தீர்வு மற்றும் நல்லிணக்கம், புகார்கள், மேலாண்மை பயன்பாடுகள் ஆகிய இவைகளை வங்கி ஊழியர்கள் வீட்டிலிருந்து பார்த்துக்கொள்வர்கள். இவ்வாறு செய்வதால் பணியாளர் உற்பத்தி பல மடங்கு அதிகரிக்கும்” என்று எஸ்பிஐ வங்கி செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.