நடிகர் தனுஷை உரிமை கொண்டாடும் வழக்கை மார்ச் 20-ம் தேதிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை ஒத்திவைத்துள்ளது.
சிவகங்கையின் திருப்புவனத்தை சேர்ந்த கதிரேசன், மீனாட்சி தம்பதி நடிகர் தனுஷ் தங்களின் மகன் என மேலூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதை ரத்து செய்ய கோரி தனுஷ் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கில் கதிரேசன்,மீனாட்சி சார்பில் பல ஆதாராங்கள், சான்றிதழ்கள் சமர்பிக்கப்பட்டது. அவற்றில் உள்ள அங்க அடையாளங்கள் தனுஷின் உடலில் உள்ளதா? என உறுதி செய்ய அவரை நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து கடந்த 2ல் தனுஷ் நேரில் ஆஜரானார். இந்தநிலையில் தனுஷ் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தனுஷ், அவரை உரிமை கொண்டாடும் தம்பதி சார்பில் தனி அறையில் நீதிபதி முன் வாதம் நடந்தது.
இதை கேமிராவில் பதிவு செய்தததுடன், சுமார் 1 மணி நேரம் 20 நிமிடங்கள் வாதத்துக்கு பின் இந்த வழக்கை வரும் 20-ம் தேதிக்கு ஒத்திவைத்துப்பதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
கோவை நரசிம்மநாயக்கன்பாளையத்தில் தன ஆகர்ஷன மகாலட்சுமி குபேரர் சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபாடு
சத்குருவின் தமிழ் புத்தாண்டு வாழ்த்து!
தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சியின் கோவை மத்திய மாவட்ட பொதுக்குழு கூட்டம்
தர்ட் ஐ அமைப்பின் ஆட்டிசம் விழிப்புணர்வு காணொளியை வெளியிட்ட நடிகை கெளதமி
ஆகாஷ் நிறுவனம் சார்பாக ஜே.இ.இ. தேர்வுகளுக்கு மாணவர்களை தயார்படுத்த ஆகாஷ் இன்விக்டஸ் எனும் புதிய பாடத்திட்டம் கோவையில் அறிமுகம்
கோவையில் சூயஸ் இந்தியா சார்பில் புலம்பெயர்ந்த வெளிமாநில தொழிலாளர்களுக்கான மருத்துவ முகாம்