April 15, 2016 தண்டோரா குழு
அசாம் மாநிலத்தில் உள்ள பிரபல தேசிய பூங்காவிற்கு இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் மற்றும் அவருடைய மனைவி கேட் ஆகியோர் பார்வையிட வந்தனர். அதை முன்னிட்டு இரவு காவலர்கள் வேறு
பணிகளுக்கு அனுப்பப்பட்டனர். அதைச் சாதகமாக பயன்படுத்திக் கொண்டு தந்தத்திற்காக வேட்டையாடும் கும்பல் ஒன்று ஆண் காண்டாமிருகம் ஒன்றை AK47 ரக துப்பாக்கியை கொண்டு அதைச் சுட்டு கொன்று விட்டு கொம்பை வெட்டி எடுத்துச் சென்றுள்ளனர்.
கடத்தல்காரர்கள் தங்களுடைய சட்டவிரோத வர்த்தகத்திற்கு மியான்மர் எல்லையைப் பயன்படுத்துகின்றனர். கடந்த மூன்று நாட்களில் இச்சம்பவம் இரண்டாம் முறையாக நடைபெறுகிறது. தந்தத்திற்காகக் காண்டா மிருகத்தை வேட்டையாடுபவர்கள் ஆண் காண்டாமிருகம் ஒன்றை AK47 ரக துப்பாக்கியை பயன்படுத்தி சுட்டுக் கொன்று விட்டு கொம்பை எடுத்துச் சென்றது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும், துப்பாக்கியின் வெற்று ஷேல்கள் சம்பவம் நடந்த இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது என்றும் பிரதேச வன அதிகாரி சுபாசிஷ் தாஸ் தெரிவித்தார்.
மேலும் அவர் பேசுகையில், வேட்டைக்காரர்கள் சீன மருந்து தயார் செய்வதற்கு அந்தக் கொம்பு உபயோகப் படுத்தப்படுத்துகிறார்கள் என்றும் அந்த மருந்து கோடி ரூபாய் அளவிற்கு லாபம் தருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
இச்சம்பவம் கண்டுபிடிப்பதற்கு முன்னதாக அரச தம்பதியினர் வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு மையத்தில் ஒத்தைக் கொம்புடைய காண்டாமிருகத்தை சுமார் 50 மீட்டர் தூரத்தில் பார்த்தனர். மேலும் அதன் குட்டிக்கு பாலூட்டி மகிழ்ந்தனர்.
தீவிரவாதிகள் மற்றும் கருப்பு பண முதலைகளால் நடத்தப்படும் இந்த வன்முறைகளைத் தடுக்க இந்தப் பூங்காவின் அதிகாரிகள் போராடி வருகிறார்கள். மேலும் வேட்டைக்காரர்களை எதிர்த்துப் போராட அங்கு பணிபுரியும் காவலர்களுக்குச் சரியான ஆயுதங்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு 20 காண்டாமிருகங்களும், இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஏழு காண்டாமிருகங்கள் கொள்ளப்பட்டுள்ளன. இது வரை AK47 மற்றும் AK56 ரக அதிநவீனத் துப்பாக்கியை பயன்படுத்தி வேட்டையாடியதாக 93 வழக்குகள் பதிவாகி உள்ளது. இவ்வாறு வேட்டையாடப்படும் ஒத்தை காண்டமிருகளின் கொம்புகள் தெற்கு ஆசியாவின் கருப்பு சந்தையில் 50 லட்சத்திற்கு ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இது குறித்து பேசிய அசாம் வனத்துறை அமைச்சர் அட்வா முண்டா, நாகலாந்து மற்றும் மணிப்பூரில் உள்ள போராளிகளை போல வேட்டைக்காரர்கள் M16 ரக துப்பாக்கியை பயன்படுத்துகின்றனர் என்றும் நம்முடைய ஆயுதம் தாங்கிய காவலர்களிடம் இந்த ரக துப்பாக்கிகள் இல்லை என்பதால், காசிரங்க தேசிய பூங்காவில் நடைபெறும் இது போன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் மத்திய அரசின் ஆதரவைக் கேட்டு உள்ளோம் என்றும் தெரிவித்துள்ளார்.