March 11, 2017 தண்டோரா குழு
“மணிப்பூரின் இரும்பு பெண்மணி” என்று அழைக்கப்பட்ட ஐரோம் ஷர்மிளா சட்டப் பேரவைத் தேர்தலில் தோல்வியடைந்தார்.
மத்திய அரசின் ஆயுதப் படை சிறப்பு அதிகார சட்டத்தை ரத்து செய்யவேண்டும் என்று மணிப்பூரில் பதினாறு ஆண்டுகளாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியவர் இவர்.
மணிப்பூரில் சில மாதங்களுக்கு முன் மக்கள் எழுச்சி நீதிக் கூட்டணி என்ற கட்சியை ஆரம்பித்த இவர் தோபால் தொகுதியில் மணிப்பூர் முதல்வர் ஒபோபி சிங்கை எதிர்த்துப் போட்டியிட்டார்.
இந்தத் தொகுதியில் பதிவான வாக்குகள் சனிக்கிழமை காலையில் எண்ணப்பட்டன. ஆரம்பத்தில் இருந்தே பின்னடைவைச் சந்தித்த ஐரோம் ஷர்மிளாவுக்கு வெறும் 90 ஓட்டுக்கள் மட்டுமே கிடைத்தன. முதல்வர் ஒபோபி சிங் 18,649 ஓட்டுக்கள் பெற்று வெற்றி பெற்று தனது தொகுதியைத் தக்க வைத்துக்கொண்டார்.