March 11, 2017 தண்டோரா குழு
அதி சக்திவாய்ந்த 300 கிலோ ஆயுதமான பிரோமஸ் சூப்பர்சானிக் ஏவுகணை ஒடிஸா கடலோரப் பகுதியான சந்திப்பூரிலிருந்து சனிக்கிழமை செலுத்தி சோதனை செய்யப்பட்டது. இந்த ஏவுகணை நடமாடும் ஏவுதளத்திலிருந்து காலை 11.33 மணியளவில் செலுத்தப்பட்டது குறிப்பிடத் தக்கது என்று பாதுகாப்பா ஆய்வு மற்றும் வளர்ச்சி நிறுவனத்தின் (DRDO) அதிகாரிகள் தெரிவித்தனர்.
300 கிலோ ஆயுதங்களை ஏந்திக் கொண்டு ஏவுவதற்கான திறன் படைத்த இந்த ஏவுகணை இருவகையிலானது. ஒரு திடமான எரிபொருளும் இன்னொன்று திரவ எரிபொருளும் கொண்டவை. இந்த ஏவுகணை ராணுவம், கடற்படையில் பணிக்காக இணைக்கப்பட்டுவிட்டது.