March 13, 2017 தண்டோரா குழு
தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்குக் கோடை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ். பாலசந்திரன் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் திங்கட்கிழமை கூறுகையில், “தமிழகத்தில் தற்போது கோடை காலம் தொடங்கிவிட்டது. வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால், இதன் காரணமாக மாலை நேரங்களில் மேகங்கள் உருவாகி மழை பெய்யும் இதனைக் கோடை மழை என்று அழைக்கிறோம்.
தமிழக கடலோர பகுதிகளில் தற்போது குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையோ, காற்றின் மேலடுக்கில் ஏற்படும் சுழற்சியோ எதுவும் உருவாகவில்லை. எனவே, கோடை காலத்தையொட்டி அடுத்து 5 நாட்களுக்குத் தமிழகத்தில் உள்மாவட்டங்களில் சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தின் பிற மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது” என்றார்.