March 13, 2017 தண்டோரா குழு
மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லிக்குக் கூடுதல் பொறுப்பாக பாதுகாப்புத் துறை ஒதுக்கபட்டுள்ளது.
சமீபத்தில் நடந்து முடிந்து ஐந்து மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் கோவாவில் சிறிய கட்சிகள் மற்றும் சுயேச்சைகளின் உதவியுடன் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைக்க உள்ளது.
அந்த மாநிலத்தின் முதல்வராக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் தேர்வு செய்யபட்டுள்ளார். செவ்வாயன்று மாலை அவர் கோவா முதல்வராகப் பதவியேற்கவுள்ளார். அதையடுத்து, அவர் தனது மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்து குடியரசுத் தலைவருக்குக் கடிதம் அனுப்பியுள்ளார். பாரிக்கரின் ராஜிநாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஏற்றுகொ கொண்டுள்ளார்.
அதனையடுத்து, நிதியமைச்சர் அருண் ஜேட்லி பாதுகாப்புத் துறையை கூடுதலாகக் கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் மத்திய அமைச்சவரவையில் மாற்றம் செய்யப்பட்டு புதிய அமைச்சர்கள் நியமனம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.