March 14, 2017 தண்டோரா குழு'
கேரள மாநில சட்டப் பேரவையில் 2௦17 – 18 ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையில் திருநங்கையர்களின் நல்வாழ்வுக்கு 1௦ கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கேரள சமூகநலத் துறை அமைச்சர் கே.கே. ஷைலஜா கூறுகையில்,
“சமீபத்தில் 2௦17ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் திருநங்கையரின் நல்வாழ்வுக்கு 1௦ கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
திருநங்கையரின் புதுவாழ்வு குறித்து கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையில், “இந்தத் தொகை அவர்களுடைய கல்வி, சுகாதாரம், ஓய்வூதியம் ஆகியவற்றுக்குச் செலவிடப்படும். அவர்களுக்கு ஏற்கனவே அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. அவர்களுடைய புதுவாழ்வுக்காகவும் பொதுநலத்தின் ஒரு பகுதியாக, அவர்களுக்கு திறன் மேம்பாட்டுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று ஷைலஜா கூறினார்.