தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் மே 16ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காகத் தமிழகத்தில் உள்ள முக்கிய கட்சிகள் வேட்பாளர்கள் அறிவிப்பு, தேர்தல் அறிக்கை வெளியிடுவது எனத் தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது.
தமிழகத்தில் கடந்த முப்பது வருடங்களாகத் திராவிட முன்னேற்றக் கழகம், மற்றும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தான் மாறி மாறி ஆட்சி செய்து வருகிறது. முக்கிய கட்சிகளான இந்த இரு கட்சிகளை சேர்ந்தவர்களும் ஒருவர் மாறி மற்றொருவர் குற்றம் சாட்டி வருவது வாடிக்கையான ஒன்றுதான். தமிழகத்தைப் பொறுத்தவரை இந்தக் கட்சிகள் தான் பெரும்பாலும் ஆட்சி செய்து வந்தள்ளன.
இருப்பினும் தேர்தல் சமயம் வந்தால் போதும் திமுக தேர்தல் அறிக்கையை அதிமுக விமர்சிப்பதும், அதிமுக தேர்தல் அறிக்கையை திமுக விமர்சிப்பது என கலைகட்டத் துவங்கும்.
தேர்தலின் சமயத்தில் தான் முக்கிய தலைவர்களின் பேச்சுக்கள் மக்களை சுண்டியிழுக்கும் அளவிற்கு இருக்கும்.
மக்களின் மூளையைச் சலவை செய்யும் அளவிற்கு அவர்களது பேச்சுக்கள் இருக்கும். என்னதான் அவர்கள் தமிழக அரசியல் சூழ்நிலை குறித்தும் எதிர்க் கட்சிகள் குறித்தும் கடுமையாக விமர்சித்துப் பேசினாலும் முக்கியமான மக்கள் அதனை எளிதில் மறந்து விடுவார்கள். ஆனால் முடிவில் அவர்கள் பேசும் சில வார்த்தைகள் மக்களுக்கு எப்பொழுதும் நினைவிற்கு வரும்.
அந்த வகையில் கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போதும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது திமுகவை கடுமையாக விமர்சித்து, அதிமுகவை வெற்றி பெற செய்வீர்களா! செய்வீர்களா!! என்று கேட்டு வந்தார்.
அதைக் குறிக்கும் வகையில் ஸ்டாலினும் தற்போது மக்களைக் கவரும் வகையிலும், அதிமுகவை
விமர்சிக்கும் வகையிலும் பேசிவருகிறார். அதற்காக தற்போது சொன்னீங்களே! செஞ்சிங்களா! என அனைத்துக் கூட்டங்களிலும் கிண்டலாகப் பேசிவருகிறார்.
ஆனால் மே 19ம் தேதி தான் தெரியும் மக்கள் என்ன செய்தார்கள் இப்போது என்ன செய்யப்போகிறார்கள் என்று………….
தொழில்நுட்ப முன்னேற்றத்துடன் தமிழகத்திலும் கேரளாவிலும் ப்யூர் பவர் அறிமுகம்
கோவை நரசிம்மநாயக்கன்பாளையத்தில் தன ஆகர்ஷன மகாலட்சுமி குபேரர் சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபாடு
சத்குருவின் தமிழ் புத்தாண்டு வாழ்த்து!
தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சியின் கோவை மத்திய மாவட்ட பொதுக்குழு கூட்டம்
தர்ட் ஐ அமைப்பின் ஆட்டிசம் விழிப்புணர்வு காணொளியை வெளியிட்ட நடிகை கெளதமி
ஆகாஷ் நிறுவனம் சார்பாக ஜே.இ.இ. தேர்வுகளுக்கு மாணவர்களை தயார்படுத்த ஆகாஷ் இன்விக்டஸ் எனும் புதிய பாடத்திட்டம் கோவையில் அறிமுகம்