• Download mobile app
26 Nov 2024, TuesdayEdition - 3212
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

வாட்ஸ்அப் குரூப்பில் இருந்து வெளியேராததால் பாரூக் கொலை செய்யப்பட்டாரா?

March 20, 2017 தண்டோரா குழு

கோவை உக்கடம் பகுதியில் கடந்த 16 ம் தேதி இரவு 11.40 மணியவில் திராவிடர் விடுதலை கழகத்தை சேர்ந்த பாரூக் என்பவர் மர்மநபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொலை வழக்கு தொடர்பாக 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், இந்த கொலை வழக்கு தொடர்பாக இதுவரை அன்சர், சதாம் உசேன் மற்றும் சம்சுதீன் ஆகியோர் சரணடைந்துள்ளனர்.

மத நம்பிக்கைகளுக்கு எதிராக பகுத்தறிவு கருத்துக்களை முன்வைத்து செயல்பட்டதால் பாரூக் கொலை செய்யப்பட்டதாக காவல் துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுமட்டுமல்லாது,சமூக வலைத்தளங்களில் கடவுள் மறுப்பு கொள்கைள் சம்பந்தமாக பல்வேறு கருத்துக்களை தொடர்ந்து பாரூக் தெரிவித்து வந்துள்ளதே அவரது மரணத்திற்கு காரணமாகவும் சொல்லப்படுகிறது. இதனால் அவரது சமூக வலைத்தளங்களை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இதையடுத்து, போலீசாரின் பலகட்ட விசாரணையில், தமிழத்தில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பாரூக் உட்பட 400 முஸ்லிம்கள் ஒன்றிணைந்து“ அல்லாஹ் முர்தத் “ என்ற வாட்ஸ் அப் குரூப்பில் இணைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் பெரியார் கொள்கையால் ஈர்க்கப்பட்டவர்கள். அதில், சில நாட்களுக்கு முன்பு பாரூக் தனது மகள் “ கடவுள் இல்லை” என்ற வசனம் அடங்கிய பதாகையை வைத்திருப்பது போன்று ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இதுமட்டுமின்றி சமூக வலைத்தளங்களான பேஸ்புக், வாட்ஸ்அப் மூலம் கடவுள் மறுப்பு கொள்கைகளை தொடர்ந்துபாரூக் பரப்பி வந்துள்ளார். இதைக்கண்டு கோபமடைந்த அவர் சார்ந்த சமூகத்தினர் சிலர் அவருக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் மிரட்டல் விடுத்தும், அவ்வாறான வாட்ஸ்அப் குரூப்பில் இருந்து வெளியேறுமாறும் கூறியுள்ளதாக தெரிகிறது. இதனைக் பெரிதா எடுத்தக்கொள்ளதாக பாரூக் தொடர்ந்து மதம் சார்ந்தும் கடவுளுக்கு எதிராக கருத்துகளையும் பரப்பிவந்துள்ளார். இதனால் மேலும் ஆத்திரமடைந்த பாரூக் சார்ந்த சமூகத்தை சேர்ந்த ஒரு கும்பல் அவரை படுகொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளஅன்சர், சதாம் உசேன் மற்றும் சம்சுதீன் எந்த ஒரு பயங்கரவாத அமைப்பையும் சார்ந்தவர்கள் இல்லை என்பதும் கடவுள் மறுப்புக் கொள்கையை விரும்பாததால் தான் அவர்கள் பாரூக்கை கொலை செய்தார்கள் என காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. இதில் சதாம் உசேன் பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யபட்டு சிறையில் இருக்கும் கிச்சான் புகாரியின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், உயிரை பறிக்கும் செயலை இஸ்லாம் ஒருபோதும் ஏற்காது எனவும் எங்கள் மார்க்கம் எங்களுக்கு, அவர்கள் மார்க்கம் அவர்களுக்கு என்கிற நிலையில்தான் இஸ்லாமிய அமைப்புகள் செயல்படுவதாகவும், மாற்று கருத்தாளர்களை கொலை செய்வது இஸ்லாத்திற்கு எதிரானது என்றும் பரூக்கின் படுகொலையை வன்மையாக கண்டிப்பதாக இஸ்லாமிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க