March 21, 2017
தண்டோரா குழு
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் கங்கை அமரனுக்கு சூப்பர்ஸ்டார் ரஜினி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவால் உயிரிழந்ததையடுத்து அவரது தொகுதியான ஆர்கே நகர் தொகுதி காலியானது. அத்தொகுதிக்கு வருகிற ஏப்ரல் 12-ம் தேதியன்று தேர்தல் நடைபெறவுள்ளது. அதில்,பாஜக சார்பில் இசையமைப்பாளர், பாடகர் கங்கை அமரன் போட்டியிடுகிறார்.
இந்நிலையில், கங்கை அமரன் நடிகர் ரஜினிகாந்தை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தார். அப்போது, ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் கங்கை அமரனுக்கு சூப்பர்ஸ்டார் ரஜினி வாழ்த்து தெரிவித்தார்.