March 22, 2017 தண்டோரா குழு
சுமார் 3௦௦ ஆண்டுகள் பழமை வாய்ந்த 1௦௦௦௦க்கும் மேற்பட்ட தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள் சீனாவின் தென்மேற்கு சிச்சுவான் மாகணத்தில் உள்ள ஒரு நதியிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.
2௦15-ம் ஆண்டு, அந்த நதியின் ஆற்றங்கரையிலிருந்து 7 வெள்ளி கட்டிகளை கட்டட தொழிலார்கள் கண்டுபிடித்தனர். இதையடுத்து அந்த இடத்தில் புதையல் இருப்பதற்கான அறிகுறிகள் தெரிய வந்தது. 2௦1௦-ம் ஆண்டு அந்த இடம் பாதுகாக்கப்பட்ட இடம் என்று சீனா அரசால் அறிவிக்கப்பட்டது.
தற்போது அங்கு கண்டுபிடிக்கப்பட்ட பொருட்களில் பெரும் அளவு தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலத்தால் ஆன நாணயங்கள், வாள்கள், கத்திகள், மற்றும் நகைகள் கிடைத்தது.
இதில் பல பொருட்கள் நல்ல நிலையிலும் தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களில் செதுக்கப்பட்ட எழுத்துக்கள் படிப்பதற்கு இன்னும் தெளிவாக இருக்கிறது.
கண்டுபிடிக்கப்பட்ட பல பொருள்கள் கி.மூ 1368-ம் ஆண்டு முதல் 1644-ம் ஆண்டு இடையே உள்ள காலத்தை சார்ந்தது என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்துள்ளனர்.
இந்த புதையல் கண்டுபிடிக்கப்பட்ட தளம் மிஜியாங் நதியும் அதன் கிளையான ஜிஞ்சியான் நதியும் இணையும் இடத்திலுள்ளது. சிச்சுவான் தலைநகர் செங்க்டூவிலிருந்து 5௦ கிலோமீட்டர் தூரத்திலுள்ளது.
1646ம் ஆண்டில், சீன விவசாய போராட்டம் நடைபெற்றது. அந்த போராட்டத்தில் ஜியான்ஜோங் என்ற விவசாய தலைவரை மிங் வம்சவாளியர்கள் தோற்கடித்தனர். அப்போது அவருடைய செல்வங்களை மிங் படைவீரர்கள் இந்த நதிகள் வழியாக 1௦௦ படகுகளில் எடுத்து சென்றபோது அந்த படகு மூழ்கியது என்று கருதப்படுகிறது. பல ஆண்டுகளாக இது ஒரு கதையாக கருதப்பட்டது. ஆனால் தற்போது அது உண்மையாகியுள்ளது.
சீன ஆராய்ச்சியாளர் வாங் வீ கூறுகையில்,
“கண்டறிந்த பொருட்கள் எவ்விடத்தில் இந்த போரரட்டம் நடைபெற்றது என்பதற்கு நேரான மற்றும் நிர்பந்திக்கும் சான்றுகள் ஆகும்” என்றார்.