March 22, 2017
தண்டோரா குழு
உத்தரப்பிரதேச மாநில முதல்வராக யோகி ஆதித்யநாத் பதவியேற்ற பின்பு முதற்கட்டமாக, அனைத்து அமைச்சர்களும் 15 நாளில் தங்களது சொத்துக் கணக்கை வெளியிட வேண்டும் என்றும்,மேலும் அமைச்சர்களிடம் உள்ள அசையும் மற்றும் அசையாச் சொத்துக்கள் தொடர்பான விபரங்களை வெளியிட வேண்டும் என்றும் உத்தரவைப் பிறப்பித்தார்.
இதனைத்தொடர்ந்து உத்தரப்பிரதேச மாநிலத்தில் தலைமைச் செயலகம் உள்பட அனைத்து அரசு அலுவலகங்களிலும் பணியின் போது அதிகாரிகள் பான்மசாலா, புகையிலைப் பொருட்கள் பயன்படுத்த கூடாது என்று அடுத்த உத்தரவை அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பிறப்பித்துள்ளார்.
மேலும், இந்த உத்தரவை மாநிலம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களிலும் பின்பற்றும்படியும், தவறும்பட்சத்தில் அரசு ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவுறுத்தியுள்ளார்.