• Download mobile app
26 Nov 2024, TuesdayEdition - 3212
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை பாரூக் கொலை வழக்கில் மேலும் மூன்று பேர் கைது

March 22, 2017 தண்டோரா குழு

கோவை உக்கடம் பகுதியை சேர்ந்த இரும்பு வியாபாரியான பாரூக் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார்.இந்த வழக்கில் ஏற்கனவே மூன்று பேர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

இந்நிலையில் மேலும் மூன்று பேரை கைது செய்த காவல்துறையினர் அவர்களை நீதிபதி முன் ஆஜர் படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

கோவை உக்கடம் அடுத்த பிலால் எஸ்டேட் பகுதியை சேர்ந்த அமீது என்பவரது மகன் பாரூக்.உக்கடம் பழைய இரும்பு மார்க்கெட்டில் வியாபாரம் செய்து வரும் பரூக்கிற்கு 3 ஆம் வகுப்பில் பயிலும் மகள் மற்றும் 6ம் வகுப்பில் பயிலும் மகன் என இரண்டு குழந்தைகள் உள்ளன.

இந்நிலையில் கடந்த 16ம் தேதி இரவு பணி முடித்து வீட்டிலிருந்த அவருக்கு சுமார் 11.45 மணியளவில் செல்போன் மூலம் அழைப்பு ஒன்று வந்துள்ளது.அதில் பேசிய மர்ம நபர் தொழில் ரீதியாக பேச வேண்டும் எனவும், உக்கடம் பகுதியில் உள்ள மாநகராட்சி கழிவுநீர் பண்ணை அருகே வருமாறும் கூறியுள்ளார்.

இதனையடுத்து தனது இரு சக்கர வாகனத்தில் அப்பகுதிக்கு வந்த பாரூக்கை ஏற்கனவே அங்கு காத்திருந்த மர்ம நபர்கள் திடீரென தாங்கள் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களால் தாக்க துவங்கியுள்ளனர்.

அப்போது அங்கிருந்து தப்ப முயன்ற பாரூக்கை தங்களிடமிருந்த கத்தியை கொண்டு சரமாரியாக குத்தியும் வெட்டியும் நிலைகுலைய செய்து அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.

இதனால் பாரூக்கின் அலறல் சத்தம் கேட்டு அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் வருவதற்குள் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த பாரூக் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

பின்னர் சம்பவம் குறித்த தகவல் அறிந்து வந்த உக்கடம் காவல்நிலைய போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன் அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மூன்று இருசக்கர வாகனத்திலும் ஒரு ஆட்டோவிலும் தப்பி சென்றது தெரிய வந்தது.இதையடுத்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்த வந்த நிலையில் கடந்த 17ம் தேதி அன்ஷாத் என்பவரும் பின்னர் 20 தேதி சதாம் உசேன்,சம்சுதீன் என்ற இருவரும் அடுத்தடுத்து நீதிமன்றத்தில் சரணந்தனர்.

இந்த நிலையில் இவ்வழக்கு தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கடந்த இரண்டு தினங்ளாக ஜாபர்,அக்ரம் ஜிந்தா,முகம்மது முனாப் உள்ளிட்ட மூன்று பேரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.அதில் மூவரும் கொலை சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வரவே அம்மூவரையும் இன்று கைது செய்து கோவை 5 வது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி செல்வகுமார் முன்பாக ஆஜர்படுத்தினர்.

வழக்கை விசாரித்த நீதிபதி மூவரையும் வருகிற ஏப்ரல் 5 ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.அதனடிப்படையில் அம்மூவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் படிக்க