March 22, 2017 தண்டோரா குழு
இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது தொடர்பான முடிவை தேர்தல் ஆணையம், வியாழக்கிழமை அறிவிக்கும் என தகவல்.
இரட்டை இலைச் சின்னம் யாருக்கு என்பது குறித்து இருதரப்பு வழக்கறிஞர்களும் தேர்தல் ஆணையத்தில் முன் தங்கள் தரப்பு வாதங்களை புதன்கிழமை நிறைவு செய்துள்ளனர்.
இது தொடர்பாக ஓ.பி.எஸ்., அணியை சார்ந்த ராஜ்யசபா எம்.பி., மைத்ரேயன் கூறுகையில்
“சட்டவிதிகளின்படி தேர்தல் சின்னமானது வேட்பாளர்களுக்கு பொது செயலாளரால் மட்டுமே கொடுக்க முடியம். பொது செயலாளர் இல்லாத போது அவைத்தலைவர் மதுசூதனனுக்கு மட்டுமே அந்த அதிகாரம் உள்ளது. சசிகலாவுக்கும் தினகரனுக்கும் அதிகாரம் கிடையாது “என்றார் அவர்.
மேலும் அடிப்படை உறுப்பினர்கள் நிர்வாகிகள் ஓ.பி.எஸ்-சுக்கு ஆதரவாக உள்ளனர் என்று தெரிவித்தார். இரு தரப்பினருமே தங்கள் தரப்பு வாதங்களை தேர்தல் ஆணையம் முன் வைத்துள்ளோம். இதனை கருத்தில் கொண்டு தேர்தல் ஆணையம் தங்களுக்கே இரட்டை இலைச் சின்னத்தை ஒதுக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.
இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது தொடர்பான முடிவை தேர்தல் ஆணையம், வியாழக்கிழமை அறிவிக்கும் என சசிகலா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அரிமா சுந்தரம் செய்தியாளர்களிடம் கூறினார்.