March 23, 2017 தண்டோரா குழு
கடலுக்கடியில் மூழ்கியிருக்கும் டைட்டானிக் கப்பலைப் மக்கள் சுற்றி பார்க்க லண்டனை சேர்ந்த ‘ப்ளூ மார்பில்’ என்னும் தனியார் சுற்றுலா நிறுவனம் ஏற்பாடு செய்து வருகிறது.
உலகத்தின் மிகப்பெரிய கப்பலாக கருதப்பட்ட டைட்டானிக்ஏப்ரல் 14, 1912-ம் ஆண்டு, இங்கிலாந்து நாட்டின் சவுத்ஹம்ப்டன் பகுதியிலிருந்து நியூயார்க் நகருக்கு தன்னுடைய முதல் பயணத்தை மேற்கொண்டது.
பயணத்தின் போது பனிப்பாறையில் மோதி, இரண்டாக உடைந்து கடலுக்கடியில் மூழ்கியது. இச்சம்பவம் நடந்து ஏறக்குறைய 1௦௦ ஆண்டுகள் கடந்துவிட்டன. எனினும், இதனுடைய மோகம் குறையவில்லை.
டைட்டானிக் கப்பல் கதையை மையமாக கொண்டு டைட்டானிக் என்னும் ஹாலிவுட் திரைப்படமும் வெளியாக மக்களின் ஆர்வத்தை இன்னும் அதிகமாக தூண்டியுள்ளது.
அட்லாண்டிக் கடலுக்கடியில் மூழ்கியிருக்கும் டைட்டானிக் கப்பலைப் பார்க்க 8 நாள் பயண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கனடா நாட்டின் நியூபௌன்ட்லான்டி துறைமுகத்திலிருந்து பயணிகளை அழைத்து செல்ல லண்டனை சேர்ந்த ப்ளூ மார்பில் என்னும் தனியார் சுற்றுலா நிறுவனம் ஏற்பாடு செய்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக டைட்டானியம் மற்றும் கார்பன் பைபர் நீர்மூழ்கிக் கப்பல் மூலம் கடலுக்கடியில் 4000 மீட்டர் ஆழத்தில் பயணிகளை ஏற்றிக்கொண்டு செல்லும். கப்பலின் முக்கிய பகுதிகள் அனைத்தையும் உரிய வல்லுனர்களால் சுற்றிக் காண்பிக்க ஏற்பட்டு செய்யப்பட்டுள்ளது.
இந்த பயணத்திற்கான கட்டணம் 1௦5.129 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் 68 லட்சத்து 82 ஆயிரம் ரூபாய் ஆகும்.