March 23, 2017
தண்டோரா குழு
அமெரிக்காவில் உள்ள ‘ஏர்ஸ்பேஸ் சிஸ்டம்’ என்னும் நிறுவனம் ஆளில்லா விமானங்களை கண்டு பிடிப்பதற்கான கருவியை அறிமுகப்படுத்தியுள்ளது.
வெளிநாடுகளில் ஆளில்லா விமானங்கள் அதிக அளவில் பயன்பாட்டிலுள்ளது. இவைகளை பறக்க விடுவது மிக சகஜமாக இருக்கும். ஆனால், இவைகளை கொண்டு ராணுவ விடுதிகள், ராணுவ தளங்கள், சிறைச்சாலைகள், பொது இடங்களில் வேவு பார்க்கவும் உதவுகிறது. இதை பயன்படுத்தி வெடி குண்டுகளை போடும் வாய்ப்புகளும் உள்ளது.
இது போன்ற ஆபத்தான நேரங்களில், ஆளில்லா விமானங்களை கட்டுக்குள் வைத்திருப்பது அவசியமாக இருக்கிறது. இதற்கான பல வழிகளை அமெரிக்க ராணுவத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக ‘ஏர்ஸ்பேஸ் சிஸ்டம்’ ஒரு கருவியை உருவாக்கியுள்ளது. இது எதிரியின் ஆளில்லா விமானம் வருவதை அறிந்தவுடன் தளத்திலிருந்து கிளம்பி, மரங்களில் மோதாமல் எதிரியை குறி வைத்து கேவ்ளர் வலையை வீசி அந்த எதிரியை கீழே கொண்டு வரும்.