March 23, 2017
தண்டோரா குழு
பேஸ்புக் லைவ் வசதியை இனி கணிப்பொறிகளிலும்(desktop) பயன்படுத்த முடியும் என்று பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.
பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக், ‘பேஸ்புக் லைவ்’ என்னும் நேரலை காணொளி வசதியை சில மாதங்களுக்கு முன் அறிமுகப்படுத்தியது. ஆரம்பக்கட்டத்தில் இந்த வசதியை அலைப்பேசி மற்றும் மடிக்கணினிகள் மட்டும் தான் உபயோகப்படுத்த முடியும்.
தற்போது கணிப்பொறிகளில் வெப்கேமராவை பயன்படுத்தி கணினிகளிலிருந்தே பேஸ்புக் லைவ் காணொளியை நேரலை செய்ய முடியும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்த வசதியை அறிமுகப்படுத்தியதால், ட்விட்டர் மற்றும் பெரிஸ்கோப் ஆகிய தளங்களை பின் தள்ளிவிட்டு, யூடியூப் தளத்துடன் நேரடியாக பேஸ்புக் போட்டிக்கு நிற்கிறது.” என்று தெரிவித்துள்ளது.