March 24, 2017 tamil.boldsky.com
தேவையான பொருட்கள்:
சின்ன வெங்காயம் – 10.
பூண்டு – 10 .
புளி – 1 எலுமிச்சை அளவு (நீரில் ஊற வைத்து சாறு எடுத்துக் கொள்ளவும்).
உப்பு – தேவையான அளவு.
வறுத்து அரைப்பதற்கு
மல்லி – 3 டேபிள் ஸ்பூன்.
உளுத்தம் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்.
கடலைப் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்.
மிளகு – 2 டேபிள் ஸ்பூன்.
பச்சரிசி – 1 டீஸ்பூன்.
தாளிப்பதற்கு
எண்ணெய் – 6 டேபிள் ஸ்பூன்.
கடுகு – 1 டீஸ்பூன்.
சீரகம் – 1 டீஸ்பூன்.
வெந்தயம் – 1/4 டீஸ்பூன்.
கறிவேப்பிலை – சிறிது.
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் சேர்த்து குறைவான தீயில் பொன்னறிமாக வறுத்து இறக்கி, குளிர வைத்து, பின் மிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
பின் அதே வாணலியில் 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கி, அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து கிளறி, புளிச்சாற்றினை ஊற்றி, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து 20-30 நிமிடம் குறைவான தீயில் நன்கு கொதிக்க விட வேண்டும்.
அடுத்து மற்றொரு அடுப்பில் சிறு வாணலியை வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, கொதித்துக் கொண்டிருக்கும் குழம்புடன் சேர்த்து கிளறி இறக்கினால், மிளகு குழம்பு ரெடி!!!