March 24, 2017
தண்டோரா குழு
தமிழகத்தில் மேலும் மூன்று நகரங்களில் நீட் தேர்வு நடைபெறும் என மத்திய மனித வள அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் டுவிட்டரில் வெளியிட்ட அறிக்கையில்,
நீட் தேர்வு நடத்த 80 நகரங்கள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும், 23 இடங்களிலும் நீட் தேர்வு நடைபெறும் என்றும், இதன்மூலம் இந்த வருடம் 103 இடங்களில் நீட் தேர்வு நடக்கும் என்று தெரிவித்துள்ளார்.அதில் தமிழகத்தில் மட்டும் வேலூர், நாமக்கல் மற்றும் திருநெல்வேலியில் ஆகிய 3 இடங்களில் நடத்தப்படும் என்றும் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.