March 27, 2017
தண்டோரா குழு
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், புதிய சலுகை ஒன்றை அறிவித்துள்ளது.
தொலைதொடர்பு நிறுவனமான முகேஷ் அம்பானியின்ரிலையன்ஸ் ஜியோ ஜியோ வருகைக்கு பின்னர் பல்வேறு இலவச சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன் சலுகைகள் மார்ச் 31ம் தேதியுடன் முடிகிறது. இதனால், ஜியோ சிம் கார்டு வைத்துள்ளவர்கள், பிரைம் திட்டத்தில் சேர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், புதிய சலுகையை அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, ரூ.149 பிரீபெய்டு திட்டத்தின் கீழ் ரீசார்ஜ் செய்பவர்களுக்கு,2ஜிபி கூடுதல் டேட்டா வழங்கப்படும். ரூ.303க்கு ரீசார்ஜ் செய்யபவர்களுக்கு, 5 ஜிபி கூடுதல் டேட்டாவும், ரூ.499க்கு மேல் ரீசார்ஜ் செய்பவர்களுக்கு, 10 ஜிபி கூடுதல் டேட்டா அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.