March 27, 2017 தண்டோரா குழு
அரசின் நலத்திட்டங்களைப் பெற ஆதார் அடையாள எண்ணை கட்டாயமாக்க கூடாது என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் ஆதார் தொடர்பான வழக்கு விசாரணை இன்று(மார்ச் 27) நடைபெற்றது. அப்போது உச்ச நீதிமன்ற தலைமை நீதி அமர்வு,“அரசின் நலத்திட்டங்களுக்கு ஆதாரை கட்டாயமாக்கக் கூடாது. அதே சமயம் வங்கி கணக்கு துவங்குவது உள்ளிட்ட திட்டங்களுக்கு ஆதார் எண் கட்டாயம் என்பதை தடை செய்ய முடியாது. ஆதார் தொடர்பாக பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் அவற்றை விசாரிக்க 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு தேவை ஆனால் அது தற்போது சாத்தியமில்லை” என்றனர்.
பல்வேறு திட்டங்களுக்கு ஆதார் எண் கட்டாயம் என மத்திய,மாநில அரசுகள் கூறிவரும் நிலையில் உச்சநீதிமன்றம் இவ்வாறு கூறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.