March 27, 2017 தண்டோரா குழு
விவசாயிகள் தற்கொலையைத் தடுப்பதற்காக என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என்று மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
இந்தியாவில் அளவில் விவசாயிகளின் பிரச்சனை முக்கியமான பிரச்சனையாக இருந்து வருகிறது.தமிழகம் மட்டுமின்றி நாட்டின் பல மாநிலங்களில் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில்,விவசாயிகள் தற்கொலை தொடர்பான வழக்கு ஒன்றை இன்று விசாரணைக்கு ஏற்ற உச்சநீதிமன்றம் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க மத்திய அரசு என்ன நடவடிக்கைகள் எடுத்தது என்றும் மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் பற்றி அறிக்கையை நான்கு வாரங்களில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் நீதிமன்றத்தின் தீர்ப்பில் கூறப்பட்டது.
தமிழகத்தைச் சேர்ந்த விவசாயிகள் தலைநகர் டெல்லியில் கடந்த இரண்டு வாரகாலமாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்திக்கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு வடமாநில விவசாயிகள் நேரில் சென்று ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.