March 27, 2017 தண்டோரா குழு
கோவையில் பழ மார்க்கெட்டில் உணவுப்பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில்கார்பைடுகற்களால் பழுக்க வைக்கப்பட்ட5டன் மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
கோவை உக்கடம் பஸ்நிலையம் அருகில் உள்ள பழமார்க்கெட்டில் உள்ள பழக்கடைகளில் திங்கள்கிழமை உணவுபாதுகாப்புதுறை அலுவலர்கள் சோதனை நடத்தினர். அப்போது ஏராளமானகடைகளில் மாம்பழங்களை பழுக்கவைக்க கார்பைடுகற்கள் மற்றும்பவுடர் பயன்படுத்தி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, சுமார் 5டன் அளவிற்கு இருந்த மாம்பழங்கள் மற்றும் சப்போட்டாகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில்,தற்போது கோடைகாலம் என்பதால் மாம்பழ பயன்பாடுகள்அதிகரித்து வரும்நிலையில் பழவியபாரிகள்மாம்பழங்களை பழுத்தநிலையில் விற்பனை செய்வதற்காக கார்பைடுகற்களை பயன்படுத்தி வருகின்றனர்.
இது சட்டபடி குற்றம் என்ற நிலையில் இது தொடர்பாக அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அதன்படி கோவை உக்கடம்பழமார்கெட்டில் ஆய்வுமேற்கொண்டபோது முறைகோடக கார்பைடுகற்கள் மற்றும்சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட எத்தீலின் என்றபவுடர்ரை பயன்படுத்திபழங்களை பழக்க வைக்கபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சோதனையில்5டன் அளவிற்கு மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறினார்.
மேலும், கடைஉரிமையாளர்களுக்கு அதிகாரிகள்எச்சரிக்கைவிடுத்துச்சென்ற அதிகாரிகள் வியாபாரிகளுக்கு தனிவிழிப்புணர்வு முகாம் நடத்ததிட்டம் உள்ளதாக தெரிவித்தனர்.