• Download mobile app
26 Nov 2024, TuesdayEdition - 3212
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கடனை தள்ளுபடி செய்யும் வரை தமிழகம் திரும்பமாட்டோம்

March 28, 2017 தண்டோரா குழு

விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது என்று பிரதமர் மோடியிடம் இருந்து அறிவிப்பு வெளியாகும் வரை எங்களது போராட்டம் தொடரும் என்று தென்னிந்திய விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு கூறியுள்ளார்.

மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லியுடன் தில்லியில் போராடி வரும் தமிழக விவசாயிகள் இன்று சந்தித்து பேசினர்.

தமிழக விவசாயிகளை இன்று சந்தித்த தி.மு.க மாநிலங்கவை உறுப்பினர் திருச்சி சிவா, மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியுடன் விவசாயிகளை சந்திக்க ஏற்பாடு செய்தார்.

அவர்களுடனான சந்திப்பிற்கு பின்னர் தென்னிந்திய விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு செய்தியாளர்களிடம் பேசியதாவது:

“மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியிடம், பயிர் காப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும், கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தினோம்.

இந்த சந்திப்பின் போது மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணியும் உடன் இருந்தார். அவரும் போராட்டம் குறித்து கேட்டறிந்தார். பின்னர், “நாங்கள் உங்களுக்கு உதவுகின்றோம் இறந்துவிட்ட தமிழக விவசாயிகளுக்கு என்னுடைய இரங்கலை தெரிவியுங்கள்” என்றார்.

மத்திய அரசு எங்களை இதுவரை நிற்க வைத்து தான் பேசியது. இப்போதுதான் முதன் முறையாக எங்களை உட்கார வைத்து பேசியது. நாங்கள் கடன் தள்ளுபடி முழுமையாக வேண்டும் என்று கோரியுள்ளோம்.

“தமிழகத்திற்கு மட்டும் கடன் தள்ளுபடி செய்ய முடியாது, செய்வ தென்றால் இந்தியா முழுவதற்கும் செய்ய வேண்டுமே எப்படி செய்வது” என்று நிதி அமைச்சர் கூறினார். இந்தியாவில் உள்ள அனைத்து விவசாயிகளும் ஒன்றுதானே செய்துதானே ஆக வேண்டும் என்று நாங்கள் பதில் அளித்தோம். இந்த சந்திப்பு கடந்த கால சந்திப்பைவிட சற்று திருப்திகரமாகவே அமைந்துள்ளது.

விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது என்று பிரதமர் மோடியிடம் இருந்து அறிவிப்பு வெளியாகும் வரை எங்களது போராட்டம் தொடரும். அதுவரை தமிழகத்திற்கு திரும்ப மாட்டோம்.”

இவ்வாறு அய்யாகண்ணு பேசினார்.

மேலும் படிக்க