March 28, 2017 தண்டோரா குழு
சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை, தேர்தல் பாதை திருடன் பாதை , மக்கள் பாதை புரட்சி பாதை என கோவை நீதிமன்றத்தில் மாவோஸ்ட்கள் கோசம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவையில் கடந்த 2015 -ம் ஆண்டு மாவோஸ்ட்கள் ரூபேஸ், சைனா, அனூப், கண்ணன் , வீரமணி ஆகீயோரை யூ பிரிவு போலிஸார் கைது செய்தனர், அவர்கள் ஐந்து பேரும் மீது ஒன்றாக கூடி சதித்திட்டம் தீட்டுதல், போலி சிம்கார்டு, என தமிழகம் , கேரளாவில் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டனர்.
வழக்கு விசாரணைக்காக இன்று கோவை நீதிமன்றத்தில் ஐந்து பேரும் ஆஜர் படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி வரும் ஏப்ரல் 17 -ம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்தார். அதன் பிறகு ரூபேஸ் கேரளா சிறைக்கும், மற்ற நான்கு பேர் கோவை மத்திய சிறைக்கு அழைத்துச்செல்லப்பட்டனர்.
இதனிடையே “ஆர்.கே.நகர் தேர்தலை புறக்கணிப்போம், இந்த தேர்தலால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை , தேர்தல் பாதை திருடன் பாதை மக்கள் பாதை புரட்சிப் பாதை” என நீதிமன்ற வளாகத்தில் மாவோஸ்ட்கள் கோசங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.