March 29, 2017 தண்டோரா குழு
கோவா மாநிலத்தில் பணிக்கு தாமதமாக வந்த 14 அதிகாரிககள் இரண்டு நாள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கோவா மாநிலத்தின் வட மாவட்டத்தின் மம்லடாடர் பகுதியுள்ள தொகுதி வளர்ச்சி, நிலம் கண்காணிப்பு துறை, மற்றும் துணை கலெக்டர் அலுவகங்களில்கோவா வருவாய்த்துறை அமைச்சர் ரோகன் க்ஹுண்டே. இன்று திடீரென சோதனை நடத்தினார்.
அப்போது, 14 அதிகாரிகள் பணிக்கு தாமதமாக வந்துள்ளனர். இதையடுத்து, அமைச்சர் ரோகன் க்ஹுண்டே அவர்களை இரண்டு நாட்கள் பணியிலிருந்து இடைநீக்கம் செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
“பணிக்கு வரும்போது, போக்குவரத்து நெரிசலில் சிக்க வாய்ப்புள்ளதால், அலுவலகதிருக்கு சரியான நேரத்தில் வர முடியாத காரணத்தால், 15 நிமிடம் கருணை நேரம் தரப்பட்டது. ஆனால், அதையும் மீறி அலுவலகத்திற்கு தாமதமாக வந்தவர்கள்தான் 2 நாள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்றார்.
மேலும், நாங்கள் காலவரையற்ற சேவையில் உறுதியாக இருக்கும்போது, அவர்கள் குறித்த காலத்தில் அலுவலகத்திற்கு வருவது அவசியம். துணை கலெக்டர் நிலை அதிகாரி அலுவலகத்திற்கு தாமதமாக வந்தார். அவரை எச்சரித்து விட்டு பணிக்கு அனுப்பினோம் என்றார்.