• Download mobile app
23 Nov 2024, SaturdayEdition - 3209
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சொன்னீங்களே செஞ்சீங்களா வசனத்திற்கு அதிமுகவினர் எதிர்ப்பு.

April 20, 2016 தண்டோரா குழு

தனியார் தொலைக்காட்சிகளில் அ.தி.மு.க. அரசை விமர்சித்து திமுகவினர் சொன்னீங்களே செஞ்சீங்களா என்று முடியும் விளம்பரங்கள் ஒளிபரப்பாகி வருகின்றன.

இவ்விளம்பரங்களுக்கு அ.தி.மு.கவினர் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மேலும் இவ்விளம்பரங்களுக்குத் தடை விதிக்க வேண்டும் எனத் தேர்தல் ஆணையத்திடம் அ.தி.மு.க கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழக சட்டப்பேரவைக்கு மே 16ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் நெருங்கும் நேரம் என்பதால் மக்களின் கவனத்தை தங்கள் பக்கம் திருப்ப ஒவ்வொரு கட்சிகளும் ஆளும்கட்சி மீதும், ஆண்ட கட்சி மீதும் குறை கூறி வருகிறது.

இதுபோன்று கடந்த சட்டப் பேரவைத் தேர்தலின்போது அதிமுக பல வாக்குறுதிகளை அளித்தது, ஆனால், பதவியில் உள்ள அ.தி.மு.க. அரசு அதை நிறைவேற்றவில்லை எனக் கூறி தனியார் தொலைக்காட்சிகளில் விளம்பரங்கள் தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.

அதில், முதலில் இளைஞர்கள் அலைமோதி வேலை தேடுவதும் போலவும் பின்னர், முதல்வர் ஜெயலலிதாவே அந்த வாக்குறுதிகளைக் கூறுவது போன்ற காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. பிறகு சொன்னீங்களே செஞ்சீங்களா எனக் கூறுவது போல் முடியும்.

இதுபோன்று இலவச நிலம், விலைவாசி உயர்வு போன்ற வாக்குறுதிகளை அளித்துவிட்டு ஆட்சிக்கு வந்ததும் அதையெல்லாம் அ.தி.மு.க. நிறைவேற்றவில்லை என்ற வகையில் பல விளம்பரங்களை தி.மு.க. தயாரித்து, தனது தேர்தல் பிரசார விளம்பரமாக ஒளிபரப்பி வருகிறது.

இந்த விளம்பரங்களை ஒளிபரப்பத் தடை விதிக்க வேண்டும் என அ.தி.மு.க. சார்பில் தேர்தல் ஆணையத்திடம் மனு ஒன்று அளிக்கப்பட்டு உள்ளது.

இது சம்பந்தமாக தமிழக தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி கூறும்போது,

திமுக வெளியிட்டுள்ள 17 விளம்பரங்கள் குறித்து ஆய்வு செய்ய ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு குழுவிற்குத் தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ளது. அது குறித்து அறிக்கை வந்தவுடன் தவறு இருந்தால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

மேலும் படிக்க