March 30, 2017 தண்டோரா குழு
ட்ரூ காலர் ஆப்பில் இனி ரீசார்ஜ் மற்றும் வீடியோ காலிங் செய்து கொள்ளும் புதிய வசதி விரைவில் வரவுள்ளது.
நவீன உலகில் ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அவற்றின் விற்பனை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், அதற்கேற்ப சந்தையில் பல்வேறு செயலிகளும் (ஆப்) உருவாகிக் கொண்டே இருக்கின்றன.
அந்த வகையில் 2010-ம் ஆண்டு தொடங்கப்பட்ட செயலிதான் ‘ட்ரூ காலர் ஆப்’.இந்த ஆப் மூலம் நம்முடைய மொபைலில் பதிவு செய்யாத எண்ணில் இருந்து அழைப்பு வரும்போது, யார் அழைக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
இந்த ஆப்பை இந்தியாவில் 15 கோடிக்கும் அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர். அதைபோல் இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்னையை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் ட்ரூ காலர் ஆப்பில் மேலும் பல சிறப்பம்சங்கள் வரபோகிறது.
அதன்படி,இனி மொபைல் ரீசார்ஜையும் இதன் மூலம் செய்து கொள்ளலாம். இதற்காக ஐசிஐசிஐ வங்கியுடன் இது டையப் வைத்துள்ளது. மேலும் வீடியோ காலிங் வசதியும் செய்து கொடுக்கிறது ட்ரூ காலர். இதற்காக கூகுள் நிறுவனத்துடன் டையப் செய்யப்பட்டுள்ளது.